உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உச்சநீதிமன்றத்திற்கு மூன்று புதிய நீதிபதிகள் நியமனம்; கொலீஜியம் பரிந்துரை ஏற்பு

உச்சநீதிமன்றத்திற்கு மூன்று புதிய நீதிபதிகள் நியமனம்; கொலீஜியம் பரிந்துரை ஏற்பு

புதுடில்லி: கொலீஜியம் பரிந்துரையை ஏற்று உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக அன்ஜாரியா, பிஸ்னோய்,சந்துர்கர் ஆகிய 3 பேரை நியமனம் செய்து ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவிட்டார்.அண்மையில் முன்னாள் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா மற்றும் நீதிபதிகள் அபய் எஸ்.ஓகா மற்றும் திரிவேதி ஆகியோர் ஓய்வு பெற்றனர். இதனால் உச்சநீதிமன்ற நீதிபதிகள் பதவிக்கு மூன்று காலியிடங்கள் உருவாகின. தற்போது 31 நீதிபதிகள் கொண்டு உச்ச நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது.இதனால் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான கொலீஜியம் உயர்நீதிமன்ற நீதிபதிகள் அன்ஜாரியா, பிஸ்னோய்,சந்துர்கர் ஆகிய மூவரை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக பரிந்துரை செய்தது.இந்நிலையில், கொலீஜியம் பரிந்துரையை ஏற்று உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக அன்ஜாரியா, பிஸ்னோய்,சந்துர்கர் ஆகிய 3 பேரை நியமனம் செய்து ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவிட்டார். இனி உச்ச நீதிமன்றம், அதன் முழு அனுமதிக்கப்பட்ட 34 நீதிபதிகள் எண்ணிக்கையுடன் செயல்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

K.n. Dhasarathan
மே 29, 2025 17:55

கொலீஜியம் எங்கு இருக்கிறது ? அதைத்தான் பிரதமர் கலைத்துவிட்டாரே பொய் ஜே பி யினருக்கு தங்கள் சொல்வதுதான் நடக்கணும், அதற்காக கொலீஜியத்திலிருந்து எதிர்க்கட்சி தலைவரை தூக்கி, இப்போது ஒன்றிய அரசு பரிந்துரை தான் உச்ச நீதிமன்றம் செய்கிறது. அதனால் கொலீஜியம் காலாவதி ஆகி பல காலம் ஆகிவிட்டது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை