மேலும் செய்திகள்
இரண்டரை வயது குழந்தை மூச்சுத்திணறலால் உயிரிழப்பு
23-Nov-2024
வசந்த் குஞ்ச்: தென்மேற்கு டில்லியின் வசந்த் குஞ்ச் பகுதியில் உள்ள ஜே.ஜே.பந்து முகாம் அருகே கிராம சேவா டெம்போ மோதியதில் மூன்று வயது குழந்தை உயிரிழந்தது.சாலையை கடக்க முயன்ற குழந்தை மீது வேகமாக வந்த டெம்போ மோதியது. இதில் குழந்தை படுகாயமடைந்தது. உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.திங்கட்கிழமை இந்த விபத்து நடந்ததாக அதிகாரி கூறினார்.தனியார் மருத்துவமனையில் இருந்து வசந்த் குஞ்ச் வடக்கு காவல் நிலையத்திற்கு விபத்து குறித்து புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து டெம்போ டிரைவர் ரோஹித் என்பவரை கைது செய்தனர். விபத்து ஏற்படுத்திய வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
23-Nov-2024