உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அமெரிக்காவில் முடங்கியது டிக்டாக் செயலி; ஆப்பிள், கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து நீக்கம்

அமெரிக்காவில் முடங்கியது டிக்டாக் செயலி; ஆப்பிள், கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து நீக்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: அமெரிக்காவில் டிக்டாக் செயலி முடங்கியது. ஆப்பிள் ஐ ஸ்டோர், கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து நீக்கம் செய்யப்பட்டது.'டிக் டாக்' எனப்படும், மொபைல்போன் செயலி உலகளவில் பிரபலமானது. அமெரிக்காவில் 17 கோடிக்கும் அதிகமானோர் இந்த செயலியை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் இந்த செயலியில் பதிவாகும் தகவல்கள், சீன அரசுடன் பகிர்ந்து கொள்ளப்படுவதாக குற்றம் சாட்டிய அமெரிக்க அரசு, அந்த செயலி மீது நடவடிக்கை எடுத்தது. அந்நிறுவனத்தை அமெரிக்க உரிமையாளருக்கு விற்பனை செய்ய வேண்டும் என்றும், இல்லையெனில் தடையை எதிர்கொள்ள நேரிடும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்து இருந்தது. இதனை ஏற்காத நிலையில், இந்த செயலிக்கு ஜோ பைடன் அரசு சமீபத்தில் தடை விதித்தது. இதை எதிர்த்து,டிக் டாக் செயலி நிறுவனம் தாக்கல் செய்த வழக்கை, உச்சநீதிமன்றம் தடை செய்தது. இந்நிலையில், அமெரிக்காவில் டிக்டாக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடை அமலுக்கு வந்தது. ஆப்பிள் ஐ ஸ்டோர், கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து நீக்கம் செய்யப்பட்டது. தற்காலிகமாக டிக்டாக் செயலியின் சேவையை நிறுத்துவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.ஏற்கனவே பாதுகாப்பு காரணம் காட்டி, இந்தியாவில் டிக்டாக் செயலிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Ram Moorthy
ஜன 19, 2025 18:42

சீன செயலிகளை தடை செய்யும் அமெரிக்கா பிறகு எதற்கு சைனா செல்ல வேண்டும் இதெல்லாம் கண்துடைப்பு நாடகம்


..
ஜன 19, 2025 15:32

குடும்ப விலாக்போடும் யூடியுப் சேனல்களையும் தடை செய்யவேண்டும்.யூடியுப் ஓப்பன் பண்ணிணாலேவீட்டில் நடப்பது அனைத்தையும் போட்டு நோகடிக்கறாங்க


ManiK
ஜன 19, 2025 14:40

இத மோடி இந்தியால தடைசெஞ்சு 5 வருடம் ஆகிவிட்டது. முற்றிலும் தேவையில்லாத சப்ப அப்லிகேஷன். தைரியமா Uninstall பண்ணுங்க.


Gokul Krishnan
ஜன 19, 2025 13:51

சீனாவின் மீது எப்போதும் குற்றம் சுமத்தும் அமெரிக்கா அதற்கான ஆதாரங்களை ஒரு போதும் தந்தது இல்லை ஹூவ்வே நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியை சில வருடங்களுக்கு முன் கனடாவில் கைது செய்தது ஆனால் இன்று வரை அதற்கான ஆதாரங்களை தரவில்லை அவர் விடுதலையும் செய்யப்பட்டு விட்டார் தனை மீறி யார் வளர்ந்தாலும் அவர்கள் மீது குற்றச்சாட்டை வைத்து அவர்களை அழுத்தி அழிப்பது தான் அமெரிக்காவின் வேலை


தியாகு
ஜன 19, 2025 17:57

தன்னை மீறி யார் வளர்ந்தாலும் அவர்கள் மீது குற்றச்சாட்டை வைத்து அவர்களை அழுத்தி அழிப்பது தான் அமெரிக்காவின் வேலை...இதை முதலில் உங்க பக்கத்தில் இருக்கும் கட்டுமர திருட்டு திமுகவின் திருட்டு கும்பலுக்கு சொல்லுங்க. முதலில் நம் முதுகில் இருக்கும் அழுக்கை பார்ப்போம், பிறகு அமெரிக்கா ஓடலாம்.


Ramesh Sargam
ஜன 19, 2025 13:42

ஒருபுறம் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ட்ரம்ப், சீனா செல்ல விருப்பம் தெரிவிக்கிறார் சீன அதிபருடன் பேச்சுவார்த்தை செய்ய விரும்புகிறார். மறுபக்கம், சீன டிக் டாக் எனப்படும், மொபைல்போன் செயலி முடக்கப்படுகிறது. என்னதான் நடக்குது?


பெரிய ராசு
ஜன 19, 2025 13:23

சப்பை மூக்கன்களின் சவகாசமே வேண்டாம்


RSaminathan - Thirumangalam
ஜன 19, 2025 11:48

அருமையான முடிவு


mindum vasantham
ஜன 19, 2025 11:30

சீனா எதிர்ப்பில் தீர்க்கமாக உள்ளனர்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை