உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா /  சபரிமலை பக்தர்களுக்கு நேர கட்டுப்பாடு விதிப்பு

 சபரிமலை பக்தர்களுக்கு நேர கட்டுப்பாடு விதிப்பு

சபரிமலை: சபரிமலை செல்லும் பக்தர்கள் வசதிக்காக, பெருவழிப்பாதை மற்றும் புல்மேடு சத்திரம் பாதையில் கால நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எருமேலியிலிருந்து அழுதை, கரிமலை வழியாக பம்பை செல்லும் பெருவழி பாதை புராதனமானது. அதேபோல, சத்திரம்- புல்மேடு வழியாக சன்னிதானம் வருவது மற்றொரு பாதை. இந்த இரு பாதைகளிலும் பக்தர்கள் காட்டுக்குள் சிக்கிக் கொள்ளாமல் இருக்க கால நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி பெருவழிப்பாதையில் கோயிக்காவிலிருந்து காளகட்டிக்கு பக்தர்கள் காலை 6:00 முதல், மாலை 5:00 வரை செல்லலாம். அழுதையில் இருந்து காலை 7:00 முதல், மதியம் 2:30 வரை பக்தர்கள் செல்லலாம். புல்மேடு பாதையில் சத்திரத்தில், காலை 7:00 மணி முதல், மதியம் 1:00 வரை மட்டும் பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படுவர். அதன் பின் வரும் பக்தர்கள், அடுத்த நாள் காலையில் தான் அனுப்பப்படுவர். அதுபோல, இப்பாதையில் திரும்பிச் செல்லும் பக்தர்கள் காலை 8:00 மணி முதல் காலை 11:00 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்