உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மாட்டு கொழுப்பு விவகாரம்... சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு முதல்வர் சந்திரபாபு உத்தரவு

மாட்டு கொழுப்பு விவகாரம்... சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு முதல்வர் சந்திரபாபு உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

விஜயவாடா: திருப்பதி கோயில் லட்டில் மாட்டு கொழுப்பு கலந்த விவகாரம் தொடர்பாக, சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். பிரசித்தி பெற்ற திருப்பதி கோயில் லட்டு பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பு, மீன் எண்ணெய் கலக்கப்பட்ட சம்பவம் தேசிய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் அரசு மீது, தற்போதைய முதல்வர் சந்திரபாபு அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார். முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ஆட்சியில் திருமலையின் புனிதத்தைக் கெடுத்துவிட்டதாகவும், திருப்பதி லட்டில் நெய்க்குப் பதிலாக விலங்குகளின் கொழுப்பைப் பயன்படுத்தி அசுத்தப்படுத்தி விட்டதாக குற்றச்சாட்டு வைத்தார். இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசும் அறிக்கை கேட்டுள்ளது. இதனிடையே, சாஸ்திர ரீதியாகவும் ஆகம ரீதியாகவும் இதற்கு தீர்வு காணும் வகையில்,பரிகார பூஜை செய்வது குறித்து முதல்வர் சந்திரபாபு, தேவஸ்தான நிர்வாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதேவேளையில், வெங்கடேசப் பெருமானுக்கு 11 நாள் விரதம் இருக்க போவதாக அறிவித்த ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், குண்டூரில் உள்ள தசாவதார வெங்கடேஸ்வர சாமி கோவிலில் சிறப்பு பூஜை செய்து தனது விரதத்தை இன்று தொடங்கினார்.இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது: ஐ.ஜி.பி., அடங்கிய சிறப்பு குழு விசாரிக்க இருக்கிறது. இந்தக் குழு, திருப்பதி கோயில் லட்டில் மாட்டு கொழுப்பு கலக்கப்பட்டது குறித்து விசாரித்து அறிக்கை சமர்பிக்கும். அதனடிப்படையில், இதுபோன்று மீண்டும் நடைபெறாமல் இருக்கத் தேவையான நடவடிக்கைகளை அரசு எடுக்கும். அதன் பிறகு, அனைத்து கோயில்களிலும் நிலையான வழிகாட்டு முறைகளை தயார் செய்வோம், எனக் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

பேசும் தமிழன்
செப் 23, 2024 09:04

இதே தமிழ்நாட்டில் நடந்து இருந்தால்.... அதற்க்கு முட்டு கொடுக்க.... ஓசி சோறு மணி...குருமா.. சைக்கோ.. செத்தரசன்.... பாலாய் போன கிருஷ்ணன்.... ஆமை கறி சைமன்.... ஏழ்மை தகை....கனி அக்கா மற்றும் மணி அக்கா is.. . என ஒரு பெரிய கூட்டமே வந்து இருக்கும்....அங்கேயுள்ள இந்துக்கள் நம்மை போல இளிச்சவாயர்கள் இல்லை.


Constitutional Goons
செப் 22, 2024 22:57

ரெட்டி அரசு திருப்பதி கோவிலுக்கு மாட்டு கொழுப்பை ஆர்டர் செய்ததா?. இப்படியெல்லாம் ஒரு பிதற்றலா ?


supriya
செப் 23, 2024 13:17

இப்பொழுது ஸ்பெஷல் புலனாய்வு குழுவை அமைத்துள்ளனர். முடிவு வரட்டும்.


முக்கிய வீடியோ