உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / திருப்பதி லட்டு விவகாரம்... சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு; சிக்கப்போவது யார்?

திருப்பதி லட்டு விவகாரம்... சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு; சிக்கப்போவது யார்?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: திருப்பதி லட்டில் மாட்டு கொழுப்பு கலந்த விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் பா.ஜ.,வின் சுப்ரமணிய சுவாமி வழக்கு தொடர்ந்துள்ளார். பிரசித்தி பெற்ற திருப்பதி கோயில் லட்டு பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்ட சம்பவம் தேசிய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெகன்மோகனின் அரசு, திருமலையின் புனிதத்தைக் கெடுத்துவிட்டதாகவும், திருப்பதி லட்டில் நெய்க்குப் பதிலாக விலங்குகளின் கொழுப்பைப் பயன்படுத்தி அசுத்தப்படுத்தி விட்டதாக தற்போதைய முதல்வர் சந்திரபாபு அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=3ik5vced&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசும் அறிக்கை கேட்டுள்ளது. அதேவேளையில், முன்னாள் தேவஸ்தான குழு தலைவர் சுப்பா ரெட்டி, அவதூறு பரப்புவதாக ஆந்திர ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.இதனிடையே, முதல்வர் சந்திரபாபுவுடனான ஆலோசனைக்குப் பிறகு, திருப்பதி கோயிலில் பரிகார பூஜைகள் இன்று காலை முதல் நடந்து வருகிறது. தொடர்ந்து 3 நாட்களுக்கு இந்தப் பூஜைகள் நடத்தப்பட இருக்கிறது. திருப்பதி லட்டில் மாட்டு கொழுப்பு கலக்கப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டால், ஹிந்து பக்தர்கள் பெரிதும் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர். சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில், பா.ஜ.,வின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணிய சுவாமி, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். திருப்பதி லட்டில் மாட்டு கொழுப்பு கலக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக விரிவான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். அவரது இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர இருப்பதால், இந்த விவகாரத்தில் அலட்சியமாக செயல்பட்ட அதிகாரிகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

அப்பாவி
செப் 23, 2024 17:04

போய்டுச்சா...நேரடியா சுப்ரீம் கோர்ட்டுக்கே போய்டுச்சா? 2075 க்குள்ளாற தீர்ப்பு வந்து நீதி நிலைநாட்டப்படும். இல்லே முதல்ல கிராம பஞ்சாயத்து கோர்ட்டில்.கேஸ் போட்டுபடிப்படியாய் முன்சீப் கோர்ட், செஷன்ஸ் கோர்ட், ஹைகோர்ட்னு மேலே வாங்கன்னு சொல்லிட்டாப் போச்சு.


Rajan
செப் 23, 2024 17:01

சுவாமி கேஸ் போட்டு தீர்ப்பு வந்திறருக்கிறதா?


Sudha
செப் 23, 2024 16:36

வச்சிருய்யா aappu


Sudha
செப் 23, 2024 16:35

அதாவது நாடு முழுவதும் பொறுக்கிகள் நிறைய இருக்கிறார்கள்


Apposthalan samlin
செப் 23, 2024 16:35

சிக்கப்போவது சந்திரபாபு நாயுடு தான் நிரூபிக்க முடியாது எந்த சப்ளையர் என்பதை கண்டு பிடிக்காமல் கேஸ் முடிந்து விடும் . இது வரை கண்டு பிடிக்க முடியவில்லை இனிமேலும் முடியாது . இது பேர் தான் லட்டு அரசியல் மிக கேவலமானது நாயுடு ஹெரிடேஜ் நெய் பயன்படுத்தனும் என்று சொல்ல வருகிறாரோ என்னமோ


vbs manian
செப் 23, 2024 16:32

சபாஷ் சுவாமி சார்.


RAMAKRISHNAN NATESAN
செப் 23, 2024 14:03

ஏற்கனவே நாடு முழுவதும் லட்சக்கணக்கான வழக்குகள் தேக்கம் .........


Sriniv
செப் 23, 2024 13:38

No one will be implicated. If Raja could escape in the 2G scam, anything is possible.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை