உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / திருப்பதி லட்டில் மாட்டுக்கொழுப்பு; ஜெகன்மோகன் வீடு முற்றுகை; பா.ஜ., போராட்டம்!

திருப்பதி லட்டில் மாட்டுக்கொழுப்பு; ஜெகன்மோகன் வீடு முற்றுகை; பா.ஜ., போராட்டம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

விஜயவாடா: திருப்பதி லட்டில் மாட்டு கொழுப்பு கலந்ததை கண்டித்து முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் வீட்டை பா.ஜ.,வினர் முற்றுகையிட்டனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=mfpis64h&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பிரசித்தி பெற்ற திருப்பதி கோயில் லட்டு பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பூதாகரமாக எழுந்த இவ்விவகாரம் பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு, கோயிலின் புனிதம் கெட்டுவிட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. அதேவேளையில், முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் அரசு மீது, தற்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடு தொடர்ந்து குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகிறார். இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசும் அறிக்கை கேட்டுள்ளது. இதனிடையே, பிரதமர் மோடிக்கு முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கடிதம் எழுதியுள்ளார். அதில், அரசியல் நோக்கத்திற்காக கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கைகளை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு புண்படுத்தியிருப்பதாகவும், இந்த முக்கியமான தருணத்தில் நாடு முழுவதும் உங்களை நம்பியே இருப்பதாகவும், பொய்யான குற்றச்சாட்டுகளை நீக்கி, திருப்பதி தேவஸ்தானத்தின் புனிதம் குறித்த அவர்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.இந்த நிலையில், விஜயவாடா அருகே உள்ள தாடேபள்ளியில் உள்ள ஜெகன்மோகன் வீட்டை பா.ஜ.,வின் யுவ மோட்சா பிரிவினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு நிலவியது. அப்போது, திருப்பதி லட்டில் மாட்டு கொழுப்பு கலந்ததைக் கண்டித்தும், முன்னாள் அறங்காவலர் குழு தலைவரும், ஜெகன்மோகனின் சித்தப்பாவுமான சுப்பா ரெட்டிக்கு எதிராகவும் கோஷங்களையும் எழுப்பினர். இதையடுத்து, முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.,வினரை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

venugopal s
செப் 22, 2024 23:01

சும்மாவே மரத்துக்கு மரம் தாவிக் குதிப்பவர்களுக்கு இப்போது உற்சாக பானம் ஊற்றிக் கொடுத்தது போல் இருக்குமே!


vadivelu
செப் 23, 2024 07:17

இருக்கட்டுமே. உனக்கேன் எரியுது.


பாரதி
செப் 22, 2024 22:35

பக்தியின் எல்லைக்குள் அரசோ, அரசு ஊழியர்களோ தலையிட்டால், பக்தி தரத்தை இழக்கும்...


T.sthivinayagam
செப் 22, 2024 22:13

பெருமாள் கொடுக்கும் சோதனை மத்திய மாநில அரசுகளின் மீது உள்ள கோபமே பெருமாளின் இந்த அபசகுனம் பெருமாளே இதை நடத்தி வைத்தயிருக்கார்


Kanns
செப் 22, 2024 21:35

Cheap-Petty-Revenge Politics Affecting Lord& Devotees, by TDP- Naidu & Co incl BJP


rama adhavan
செப் 22, 2024 20:50

தேவையற்ற வேலை. மோடியின் 2ம் ஆட்சியில் ஜெகன் மோடியை ஆதரித்தவர். பீஜேபி அந்த வகையில் நன்றி கடன் பட்டுள்ளது. அதனால் அடக்கி வாசிக்க வேண்டும். லட்டு பிரச்சனை முடிந்த கதை. அதை ஏழுமலையான் பார்த்துக் கொள்வார்.


Ramesh Sargam
செப் 22, 2024 20:27

நான் ஏற்கனவே கூறியதுபோல, ஆந்திரா இப்பொழுதைய முதல்வர் நாயுடு, தன்னுடைய எதிரி, முந்தைய முதல்வர் ஜெகனை ஒரு லட்டு பாம் போட்டு கதிகலங்க வைத்துவிட்டார்.


பல்லவி
செப் 22, 2024 20:18

மாட்டிறைச்சியை சாப்பிட்ட வனை கொன்று விட்டால் அப்புறம் கொழுப்ப யாரு சாப்பிடுவது?


rama adhavan
செப் 22, 2024 22:38

கொழுப்பெடுத்த பதிவு.


Palanisamy T
செப் 22, 2024 20:17

திருப்பதிக் கோயில் முன்பு முருகன் கோயில், இந்தக் குறிப்பு திருப்புகழில் அன்று திருப்பதி ஏழுமலையானே போற்றி யென்று அருணகிரிநாத ஸ்வாமிகள் பாடியுள்ளார். காளஹஸ்தி கண்ணப்ப நாயனார் வழிபாடோடு சம்பந்தப் பட்டுள்ளது . அன்று அகன்ற தமிழகம். இன்று சுருங்கிய தமிழகம்l


ஆரூர் ரங்
செப் 22, 2024 20:58

அப்போ 1700 ஆண்டுகளுக்கு முன் இளங்கோவடிகள் நெடியோன் குன்றமும் தொடியோள் பெய்வமும் தமிழ் வரம்பறுத்த தண்புனல் நல் நாட்டு' என்று வடவேங்கடமலை வெங்கடேசனை பற்றி எழுதியது ஏன்? அதற்கு பிறகு முருகன் ஆலயமாகி சமீபத்தில் மீண்டும் விஷ்ணுவாகி விட்டாரா? ஸ்ரீவெங்கடேசனைப் போற்றிப் பாடிய பத்து ஆழ்வார்களின் காலம் எது?


vbs manian
செப் 22, 2024 20:14

சந்திரா பாபு நாயுடு கடந்த ஐந்து வருடமாக ஏன் மௌனம். நல்ல வேலை ஆராய்ச்சி அறிக்கை உண்மையை வெளிப்படுத்தியது.


Palanisamy T
செப் 22, 2024 20:03

திருப்பதிக் கோயிலின் புனிதத் தன்மையின் மரியாதையே போய்விட்டது . இதுமட்டுமில்லை நம்பிக்கையும் குறைந்துவிட்டது. இந்த நிலைமை தமிழகத்திற்கு வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். தமிழக அரசு மக்களிடம் இந்த உத்தரவாதத்தை மக்களிடம் அளிப்பார்களா, அவர்களின் நம்பிக்கையைக் காப்பாற்றுவார்களா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை