டி.என்.டி., சுங்கக் கட்டண வழக்கு மேல்முறையீட்டு மனு தள்ளுபடி
புதுடில்லி:டில்லி - நொய்டா மேம்பாலத்தை கட்டணமில்லா சாலையாக மாற்றும் முடிவை மறுபரிசீலனை செய்யக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்ததுடில்லி - உ.பி., மாநிலம் நொய்டா இடையே அமைந்துள்ள டி.என்.டி., மேம்பாலத்தில், தினமும் லட்சக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. இந்தப் பாலத்தைக் கட்டியுள்ள தனியார் நிறுவனமான 'நொய்டா டோல் பிரிட்ஜ் கம்பெனி லிமிடெட்' சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட்டது.சுங்கக் கட்டணம் வசூலிப்பதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை, கடந்த ஆண்டு டிசம்பர் 20ம் தேதி விசாரித்த அலாகாபாத் உயர் நீதிமன்றம், டி.என்.டி., மேம்பாலத்தில் சுங்கக் கட்டணம் வசூலிக்க தடை விதித்தது.இந்தத் தீர்ப்பை எதிர்த்து, தனியார் நிறுவனம் டில்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அந்த மனுவை விசாரித்த டில்லி உயர் நீதிமன்றம், அலாகாபாத் நீதிமன்றத்தின் உத்தரவை உறுதி செய்தது.இதையடுத்து, தனியார் நிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மனு, நீதிபதிகள் சூர்யகாந்த் மற்றும் கோடீஸ்வர் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.அலாகாபாத் மற்றும் டில்லி உயர் நீதிமன்றங்களின் உத்தரவை உறுதி செய்த நீதிபதிகள், தனியார் நிறுவனத்தின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தனர்.