உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வேலையில்லா திண்டாட்டம்; இந்த மாநிலங்களில் அதிகம்!

வேலையில்லா திண்டாட்டம்; இந்த மாநிலங்களில் அதிகம்!

புதுடில்லி: நாட்டிலேயே வேலையில்லா திண்டாட்டம் அதிகம் உள்ள மாநிலம் கேரளா என ஆய்வறிக்கை தகவல் தெரிவிக்கிறது.இந்தியாவின் பொருளாதாரம் கணிசமாக உயர்ந்து வருகிறது. கோவிட் தொற்று உள்ளிட்ட பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோதும், இந்தியாவின் பொருளாதாரம் சிறப்பாக தான் இருக்கிறது. 10 இடத்தில் இருந்து, உலகின் 5வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா முன்னேறி உள்ளது. ஐ.எம்.எப்., கணிப்பு படி, 2025ம் ஆண்டின் இறுதிக்குள் இந்தியா ஜப்பானை பின்னுக்கு தள்ளி, 4வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும். 2027ம் ஆண்டிற்குள் ஜெர்மனியை முந்தி உலகின் 3வது பெரிய பொருளாதார நாடாக மாறிவிடுவோம் என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள்.ஜூலை 2023 முதல் ஜூன் 2024ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், வேலையின்மை விகிதம் குறித்து காலமுறை தொழிலாளர் கணக்கெடுப்பு அறிக்கை வெளியாகி உள்ளது. அதில் கூறியிருப்பதாவது: நாட்டிலேயே வேலையில்லா திண்டாட்டம் அதிகம் உள்ள மாநிலம் கேரளா.கேரளாவில், 15 முதல் 29 வயது வரை உள்ளவர்களில், 29.9 சதவீதத்தினருக்கு வேலையில்லை. இவர்களில் 47.1 சதவீதத்தினர் பெண்கள். மறுபுறம் மிகக்குறைந்த எண்ணிக்கையில் வேலையின்றி தவிக்கும் இளைஞர்கள் கொண்ட மாநிலமாக மத்திய பிரதேசம் உள்ளது.

வேலையில்லா திண்டாட்டம் டாப் 10 இடங்கள்!

* கேரளா- 29.9%* நாகாலாந்து- 27.4%* மணிப்பூர்- 22.9%* லடாக்- 22.2%* அருணாச்சல பிரதேசம்-20.9%* கோவா- 19.1% * பஞ்சாப்- 18.8%* ஆந்திரப் பிரதேசம்- 17.5%

யூனியன் பிரதேசம்

* லட்சத்தீவு- 36%* அந்தமான் நிக்கோபார் தீவுகள்- 33.6%

வேலையில்லா திண்டாட்டம் குறைவு டாப் 10 இடங்கள்!

* மத்திய பிரதேசம்- 2.6%* குஜராத்- 3.1%* ஜார்க்கண்ட்- 3.6%* டில்லி- 4.6%* சத்தீஸ்கர்- 6.3%* திரிபுரா- 6.8%* சிக்கிம்- 7.7%* மேற்கு வங்கம்- 9%* உத்தரப்பிரதேசம்- 9.8%


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

அப்பாவி
செப் 26, 2024 22:48

பிகார், உ.பி, பெங்காலி காரனுகளுக்கெல்லாம் தமிழ்நாட்டுலதான் வேலை.


அப்பாவி
செப் 26, 2024 18:45

ரெண்டு கோடி வேலை உ.பி, குஜராத்துக்கே குடுத்து பத்தலையாம்.


என்றும் இந்தியன்
செப் 26, 2024 17:52

இதை Solve செய்வது மிக மிக எளிதானது. திருட்டு திராவிட மாடல் follow செய்தால் போதும். எப்போதும் மோடி தவறு ஒழிக என்று சொல்லவேண்டும் அதற்கு ரூ 200-500 உபிஸ் + சரக்கு + பிரியாணி வருடம் முழுவதும் இவர்களுக்கு வேலை கிடைத்துவிடும்


Natchimuthu Chithiraisamy
செப் 26, 2024 16:48

லல்லு ஆண்டதினால் பிகார் தப்பியது.


Kanns
செப் 26, 2024 12:54

SHAME.


ஆரூர் ரங்
செப் 26, 2024 12:16

200 உறுதியாகக் கிடைப்பதால் இங்கு வேலையின்மை அறவே இல்லை.


Apposthalan samlin
செப் 26, 2024 11:53

கேரளா கடவுள் தேசம் மலைகள் மட்டுமே உள்ளன வாழ சிறந்த இடம் ஆனால் பிழைக்க அண்டை மாநிலங்கள் இல்லை என்றால் வெளி நாடு தான் செல்ல வேண்டும் . அதனால் தான் நிலவில் கூட நாயர் டி கடை இருக்கு என்று சொல்வர்


RAMAKRISHNAN NATESAN
செப் 26, 2024 11:08

வேலையில்லாத் திண்டாட்டம் அதிகமுள்ள மாநிலங்களில் மூர்க்க அல்லது மதமாற்றக் கும்பல் அல்லது நக்சல்கள் வலுவாக உள்ளதைக்காணலாம் ..... காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட எந்தக்கட்சிக்கும் இதைச் சரிசெய்ய அக்கறை இல்லை .....


R Balasubramanian
செப் 26, 2024 10:30

தங்கத் தமிழ்நாடு எங்கப்பா...


Kumar Kumzi
செப் 26, 2024 13:35

விடியல் டாஸ்மாக் நாட்டை கொண்டு போயி அமெரிக்காவில் வித்துட்டு வந்துட்டா


என்றும் இந்தியன்
செப் 26, 2024 17:53

தங்கத்தமிழ்நாடு தங்க கூட லாயக்கில்லாத டாஸ்மாக்கினாடு ஆகிவிட்டது


jeevanandh
செப் 26, 2024 10:17

Nambunaa thaan soru…


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை