மேலும் செய்திகள்
ஹோட்டல் அறை வாடகை மைசூரில் தாறுமாறாக உயர்வு
08-Oct-2024
மைசூரு: மைசூரு அரண்மனை நுழைவுக் கட்டணம் அதிகரிப்புக்கு, சுற்றுலா பயணியர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.அரண்மனை நகரமான மைசூருக்கு நாள் தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணியர் வருகை தருகின்றனர். விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணியரின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.இந்நிலையில், மைசூரு அரண்மனை வாரியம், அரண்மனை நுழைவுக் கட்டணத்தை நேற்று முதல் உயர்த்தி உள்ளது.பெரியவர்களுக்கு 100 ரூபாயில் இருந்து 120 ரூபாயாகவும்; 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இலவசம்; 10 முதல் 17 வயது வரையிலான சிறுவர்களுக்கு 50 ரூபாயில் இருந்து 70 ரூபாயாகவும். கல்வி சுற்றுலா வரும் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு 30 ரூபாயில் இருந்து 50 ரூபாயாகவும்; வெளிநாட்டு சுற்றுலா பயணியருக்கு 100 ரூபாயில் இருந்து 1,000 ரூபாயும் ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.இதை அறியாமல் வந்த சுற்றுலா பயணியர், நுழைவுக் கட்டணத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.அவர்கள் கூறுகையில், 'சுற்றுலா பயணியரால் வருவாய் பார்க்கும் அரசு, கட்டண உயர்வு குறித்து பொதுமக்களின் கருத்துகளை கேட்டிருக்க வேண்டும். திடீரென கட்டணத்தை உயர்த்தியது ஏற்புடையதல்ல. மாவட்ட கலெக்டர் உடனடியாக வாபஸ் பெற வேண்டும். அதுபோன்று, வெளிநாட்டு பயணியரின் நுழைவுக் கட்டணத்தை 100 ரூபாயில் இருந்து 1,000 ரூபாயாக உயர்த்தியது நியாயமல்ல' என்றனர்.இது தொடர்பாக மைசூரு நகர ஹோட்டல் உரிமையாளர்கள் சங்க தலைவர் நாராயண கவுடா கூறியதாவது:நுழைவுக் கட்டணம் உயர்வு அறிவியல் பூர்வமற்றது. வெளிநாட்டு சுற்றுலா பயணியருக்கான கட்டணம் ஒரே அடியாக பத்து மடங்கு அதிகரிப்பது சரியல்ல.ஏற்கனவே மைசூருக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணியரின் எண்ணிக்கை, பத்து ஆண்டுகளில் குறைந்துள்ளது. இத்தகைய முடிவால், இவர்களின் வருகை மேலும் குறையும். எனவே, மாவட்ட நிர்வாகம், மறு பரிசீலனை செய்ய வேண்டும்.வெளிநாட்டு சுற்றுலா பயணியருக்கு 1,000 ரூபாய்க்கு பதிலாக 300 ரூபாய் பெறலாம். கட்டணத்தை உயர்த்த மாவட்ட கலெக்டருக்கு யார் உத்தரவிடுகின்றனர் என்று தெரியவில்லை. அறிவியல் பூர்வமற்ற முடிவை மாற்ற வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
08-Oct-2024