உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ம.பி.,யில் பயிற்சி டாக்டர் சக டாக்டரால் பலாத்காரம்

ம.பி.,யில் பயிற்சி டாக்டர் சக டாக்டரால் பலாத்காரம்

குவாலியர், மத்திய பிரதேசத்தில் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், 25 வயதான பயிற்சி பெண் டாக்டரை, அவருடன் பயிற்சி பெற்று வந்த சக டாக்டரே மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.மத்திய பிரதேசத்தின் குவாலியரில் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்குள்ள விடுதியில், 25 வயதான பயிற்சி பெண் டாக்டர் தங்கி படித்து வருகிறார். நேற்று முன்தினம், தன் அறையில் தேர்வுக்காக படித்து கொண்டிருந்தார். அப்போது, அவருடன் படிக்கும் சக பயிற்சி டாக்டரே, மொபைல் போன் வாயிலாக ஆண்கள் விடுதிக்கு அருகே உள்ள பயன்பாடாற்ற கட்டடத்திற்கு வரும்படி அழைப்பு விடுத்தார்.இதையடுத்து, அங்கு சென்ற பெண் பயிற்சி டாக்டரை, அவர் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால், பாதிக்கப்பட்ட அப்பெண், போலீசில் புகார் அளித்தார். இது குறித்து விசாரணை நடத்திய போலீசார், பலாத்காரம் செய்த நபரை கைது செய்தனர்.மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், பயிற்சி பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்து, படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில், தற்போது மத்திய பிரதேசத்தில் இதுபோன்ற கொடூரம் அரங்கேறி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை