உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பொய் புகார் அளித்த திருநங்கை ஆடம் பாஷா

பொய் புகார் அளித்த திருநங்கை ஆடம் பாஷா

பெங்களூரு : லாரி டிரைவர் தன்னை தாக்கியதாக, போலீசில் பொய் புகார் அளித்த, பிக்பாஸ் போட்டியாளரான திருநங்கை ஆடம் பாஷா மீது வழக்குப்பதிவு செய்ய, போலீசார் முடிவு செய்து உள்ளனர்.பெங்களூரில் வசிப்பவர் ஆடம் பாஷா. திருநங்கையான இவர், கன்னட பிக்பாஸ் சீசன் 6ல் போட்டியாளராக பங்கேற்றவர். விருந்து நிகழ்ச்சிகளில் நடனமும் ஆடுவார்.கடந்த 10ம் தேதி, எலக்ட்ரானிக் சிட்டி போலீசில் ஆடம் பாஷா அளித்த புகாரில், 'தண்ணீர் லாரியை வேகமாக ஓட்டிச் சென்றதை தட்டிக்கேட்டதால், லாரி டிரைவர் என்னை தாக்கி ஆடைகளை கிழித்தார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறி இருந்தார்.இதன் பேரில் போலீசார் விசாரித்தனர். சம்பவம் நடந்ததாக கூறப்படும் இடத்தில், பொருத்தப்பட்டு இருந்த, கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, ஆடம் பாஷாவும், அவரது நண்பர்கள் சிலரும், தண்ணீர் லாரி டிரைவரிடம் வேண்டும் என்றே தகராறு செய்ததும், ஆடைகளை ஆடம் பாஷாவை கிழித்துக் கொண்ட காட்சிகளும் பதிவாகி இருந்தன.இதையடுத்து பொய் புகார் அளித்த ஆடம் பாஷா மீது, வழக்குப்பதிவு செய்ய, எலக்ட்ரானிக் சிட்டி போலீசார் முடிவு செய்து உள்ளனர்.கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய, கன்னட நடிகர், நடிகைகள் போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில், ஆடம் பாஷாவும் கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை