உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா /  பாபர் மசூதிக்கு அடிக்கல் நாட்டுவதாக கூறிய திரிணமுல் எம்.எல்.ஏ., சஸ்பெண்ட்

 பாபர் மசூதிக்கு அடிக்கல் நாட்டுவதாக கூறிய திரிணமுல் எம்.எல்.ஏ., சஸ்பெண்ட்

கொல்கட்டா: 'பாபர் மசூதியை மீண்டும் கட்டுவேன்' என, தொடர்ந்து சர்ச்சை எழுப்பி வந்த மேற்கு வங்க எம்.எல்.ஏ., ஹுமாயூன் கபீரை, திரிணமுல் காங்கிரஸ் கட்சி இடைநீக்கம் செய்துள்ளது. மே ற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி அமைந்துள்ளது. இங்குள்ள பரத்பூர் தொகுதி எம். எல்.ஏ.,வாக இருப் பவர் ஹுமாயூன் கபீர். சர்ச்சை திரிணமுல் காங்கிரசைச் சேர்ந்த இவர், கட்சியின் உள்விவகாரம் உட்பட பல்வேறு விஷயங்களில் தலையிட்டு, சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். சமீபத்தில், நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், 'உத்தர பிரதே சம் அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினமான டிச., 6ல், முர்ஷிதாபாத் மாவட்டத்தில் புதிதாக பாபர் மசூதி கட்ட அடிக்கல் நாட்டப்படும். மூன்று மாதங்களில் மசூதி கட்டி முடிக்கப்படும்' என அறிவித்தார். இது, மேற் கு வங்க அரசியலில் பெரும் சர்ச்சையை எழுப்பியது. பா.ஜ., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், 'கபீரின் கருத்து, மத மோதலை உருவாக்கும்' என, குற்றஞ்சாட்டினர். 'அவரின் கருத்து மேற்கு வங்கத்தில் சட்டம் - ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தும்' என, மாநில கவர்னர் ஆனந்த போஸ் எச்சரித்தார். இந்நிலையில், ஹுமாயூன் கபீரை, கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்து திரிணமுல் காங்கிரஸ் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து அக்கட்சியின் மூத்த தலைவரும், கொல்கட்டா நகர மேயருமான பிர்ஹாத் ஹக்கீம் நேற்று கூறுகையில், “முர்ஷிதாபாதைச் சேர்ந்த எம்.எல்.ஏ.,க்களில் ஒருவரான கபீர், பாபர் மசூதி கட்டுவேன் என சமீபத்தில் அறிவித்தார். இந்த நடவடிக்கையை எதிர்த்து, பல முறை அவரை கட்சி எச்சரித்தது. ஆனால், கேட்கவில்லை. ''மசூதி கட்டுவதில் பிடிவாதமாக இருந்தார். கட்சிக்கு எதிரான வகுப்புவாத அரசியலில் கபீர் ஈடுபட்டார். தலைமையின் அறிவுறுத்தலின் பேரில், கட்சியில் இருந்து அவர் தற்காலிகமாக நீக்கப்பட்டு உள்ளார். அவருக்கும், கட்சிக்கும் இனி எந்த சம்பந்தமும் இல்லை,” என்றார். இரட்டை வேடம் பஹராம்பூரில் நிகழ்ச்சி ஒன்றில் நேற்று பங்கேற்ற ஹுமாயூன் கபீர் கூறியதாவது: கட்சியில் இருந்து நீக்கி, என்னை திட்டமிட்டு அவமானப்படுத்தி யுள்ளனர். இந்த விஷயத்தில் முதல்வர் மம்தா இரட்டைவேடம் போடுகிறார். அவரது இந்த நிலைப்பாட்டை வரும் தேர்தலில் அம்பலப்படுத்துவேன். ஆர்.எஸ்.எஸ்., - பா.ஜ.,வுடன் மறைமுக கூட்டணி வைத்து, சிறுபான்மையினருக்கு எதிரான செயல்களில் திரிணமுல் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளது. திட்டமிட்டபடி, மசூதிக்கான அடிக்கல் நாட்டு விழா நாளை நடக்கும். என்னை கைது செய்தாலும் பரவாயில்லை. வரும் 22ம் தேதி, என் எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்துவிட்டு, புதிய கட்சியை துவங்குவேன். அடுத்தாண்டு நடக்கும் சட்டசபை தேர்தலில், என் கட்சி, 135 தொகுதிகளில் போட்டியிடும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ