உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஓடும் ரயிலில் மனைவிக்கு ‛‛முத்தலாக் சொல்லிவிட்டு ஓடிய கணவன்

ஓடும் ரயிலில் மனைவிக்கு ‛‛முத்தலாக் சொல்லிவிட்டு ஓடிய கணவன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லக்னோ: உ.பி.,யில் ஓடும் ரயிலில் மனைவிக்கு முத்தலாக் சொல்லியதுடன், அவரை கடுமையாக தாக்கிவிட்டு தப்பித்த கணவனை போலீசார் தேடி வருகின்றனர்.உ.பி., மாநிலம் கான்பூரின் புக்ரயான் பகுதியைச் சேர்ந்தவர் முகமது அர்ஷத்(28). ம.பி., மாநிலம் போபாலில் கம்ப்யூட்டர் பொறியாளர் ஆக பணியாற்றி வருகிறார். இவருக்கும் ராஜஸ்தானின் கோட்லாவைச் சேர்ந்த அப்சனா(26) என்பவருக்கும் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த பிறகு கணவன் வீட்டிற்கு அப்சனா சென்ற போது, முகமது அர்ஷத் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பது தெரியவந்தது. அதிர்ச்சி அடைந்த அப்சனா கேள்வி எழுப்பினார். இதனால் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. மேலும், முகமது அர்ஷத்தும், அவரது தாயாரும் சேர்ந்து அப்சனாவை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்தனர்.இந்நிலையில் புக்ரயானில் இருந்து ஜான்சி பகுதிக்கு ரயிலில் இருவரும் பயணித்தனர். அப்போது கணவன் மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனையடுத்து, ரயில் ஜான்சியை நெருங்கிய நிலையில், அப்சனாவிற்கு முத்தலாக் சொன்னதுடன், அங்கேயே கடுமையாக தாக்கிவிட்டு முகமது அர்ஷத் தலைமறைவானார். செய்வது அறியாமல் தடுமாறிய அப்சனா, ரயில்வே போலீசாரை உதவிக்கு அழைத்தார். அவர்கள், இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்ததுடன், அப்சனாவை பத்திரமாக புக்ரயான் பகுதிக்கு அனுப்பி வைத்தனர். தப்பியோடிய முகமது அர்ஷத்தை தேடி வருகின்றனர்.பாதிக்கப்பட்ட அப்சனா, உதவி கேட்டு உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கு வேண்டுகோள் வைத்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 29 )

raja
மே 06, 2024 07:45

ஹி ஹி ஹி இதுகெல்லாம் உச்ச மற்றும் உயர் நீதிமன்ற கனவான்கள் அறிவுரைகள் கூற மாட்டார்கள் இந்து விவாகரத்துக்கு சகிப்பு தன்மை வேண்டும் என்று வரிசை கட்டிவந்து கூறுவார்கள்


ஆதி
மே 04, 2024 08:24

வரதட்சணை வாங்கலாம்னு புஸ்தகத்தில்.போட்டிருக்கா?


சண்முகம்
மே 03, 2024 23:58

மனைவி துணைவின்னு ஓட்ட வேண்டியது தானே?


M Ramachandran
மே 03, 2024 20:10

அவன் இன்னும் பழய உலகத்தில் இருக்கிறானா? படித்தவன் செய்யும் செய்கையா இது?


M Ramachandran
மே 03, 2024 20:09

அப்போ புல்டோசர் தான் வீடு தேடி வரும்


M Ramachandran
மே 03, 2024 20:07

இதற்கு அந்த முடிவு கட்டியாச்சேனா எஙகு ஓடிஏ முடியும் பாகிஸ்தானுக்கா அல்லது சீனாவிடம் தஞ்சமடையாவா


தாமரை மலர்கிறது
மே 03, 2024 19:54

காங்கிரஸ் வெற்றிபெற்றால், கடந்த பத்தாண்டுகளாக முத்தலாக் கொடுக்காமல் பதுசாக இருந்த இஸ்லாமிய ஆண்கள் கொம்புசீவப்பட்டு ஒரே மாதத்தில், ஐந்து லட்சம் இஸ்லாமிய பெண்களுக்கு இந்தியா முழுக்க முத்தலாக் கொடுத்து நிராதாபாணியாக எந்தவித அலிமோனியுமின்றி கைகழுவப்படுவார்கள் மோடி தான் இஸ்லாமிய பெண்களின் கடவுளாக தெரிகிறார்


Suppan
மே 03, 2024 16:30

நம்ம போராளிக்கூட்டம் எங்கே போயிற்று ? வந்தா ஒட்டு போயிடும்


Natarajan Ramanathan
மே 03, 2024 16:22

மதத்தில் வரதட்சிணை எல்லாம் கிடையாது ஆண்கள்தான் பெண்களுக்கு மஹர் கொடுக்க வேண்டும் என்று கதை விடுவார்களே? பாவம் பெண்கள்


என்றும் இந்தியன்
மே 03, 2024 16:04

கவலைப்படாதே அப்சனா நீ இன்னொருவனை திருமணம் செய்து கொள் விட்டது சனியன் தொல்லை விட்டது என்று


மேலும் செய்திகள்







புதிய வீடியோ