உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மகளிடம் தொந்தரவு: தட்டிக்கேட்ட தந்தையின் ஆட்டோ எரிப்பு

மகளிடம் தொந்தரவு: தட்டிக்கேட்ட தந்தையின் ஆட்டோ எரிப்பு

பாலக்காடு: மகளை தொந்தரவு செய்வதை தட்டிக்கேட்ட தந்தையின் ஆட்டோவை எரித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம் பாலக்காடு மேப்பரம்பு பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஒருவரின் மகளை, அப்பகுதியைச் சேர்ந்த ஆஷிப் 30, தொந்தரவு செய்து வந்துள்ளார். நேற்று முன்தினம், பெண்ணின் தந்தை இதை தட்டிக்கேட்டுள்ளார். அதில் ஆத்திரமடைந்த ஆஷிப், நள்ளிரவு அவரது வீட்டிற்கு வந்து ஆட்டோவை தீ வைத்து எரித்துள்ளார். இது தொடர்பாக பாலக்காடு டவுன் மேற்கு போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. ஆஷிப்பை போலீசார் நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ