உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஹரியானாவில் நெடுஞ்சாலையில் தூய்மை பணியாளர்கள் மீது மோதிய லாரி; 7 பேர் பலி; 4 பேர் கவலைக்கிடம்

ஹரியானாவில் நெடுஞ்சாலையில் தூய்மை பணியாளர்கள் மீது மோதிய லாரி; 7 பேர் பலி; 4 பேர் கவலைக்கிடம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சண்டிகர்: ஹரியானா மாநிலத்தில் நெடுஞ்சாலையில் தூய்மை பணியாளர்கள் மீது லாரி மோதி ஏற்பட்ட விபத்தில், 7 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.டில்லி, மும்பை இடையே தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இந்த நெடுஞ்சாலையில், ஹரியானா மாநிலத்தில் உள்ள நூஹ் மாவட்டத்தில் இன்று தூய்மைப்பணியாளர்கள் 10க்கும் மேற்பட்டோர் தூய்மை பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது நெடுஞ்சாலையில் வேகமாக வந்த லாரி தூய்மை பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஊழியர்கள் மீது மோதியது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு படையினர் நீண்ட நேரம் போராடி மீட்பு பணி மேற்கொண்டனர். இந்த விபத்தில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 4 பேர் பலத்த காயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். இவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். தூய்மை பணி செய்து கொண்டிருந்தபோது, 7 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

அப்பாவி
ஏப் 26, 2025 20:40

எழுதுவது நக்கலாக இருக்கலாம். மக்களுக்கு, அதுவும் ரோடில் இறங்கி வேலை செய்யும் பணியாளர்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் தராமல் கதி சக்தின்னு மெடல் குத்திக்கிறவங்களைத்தான் நக்கல் செய்கிறார்கள். ஒரு பய பொறுப்பேத்துக்க மாட்டான்.


சிட்டுக்குருவி
ஏப் 26, 2025 19:46

சாலை வளைவுகளில் நெடுந்தூர பார்வை இருக்காது .அதிவேகமாக வரும் வாகனங்களை சடன் BRAKE போட்டு நிறுத்துவதும் ஆபத்தில் முடியும் , பணியாளர்கள் வேலை செய்யும்போது "வேகம் குறை ,பணியாளர்கள் பணியில் உள்ளார்கள், சிகப்பு கூம்பு தடுப்புகள், அம்புக்குறியீடு செய்யும் பிளாஷ் விளக்குகள் போன்றவற்றை உபயோக படுத்த சட்டமாக்கவேண்டும் .இந்த விதிகளை மீறி உயிரிழப்பு ஏற்படுத்துபவர்களுக்கு குறைந்தபட்சம் 7 வருடம் சிறைத்தண்டனைக்கும் சட்டம் இயற்றி அதை பணியாளர்கள் பணிசெய்யும் இடங்களில் அறிவிப்பு பலகைகளில் காட்சிப்படுத்தவேண்டும்.


Veera
ஏப் 26, 2025 18:20

Lorry driver name please. Don't tell he is mentally challenged or retard


अप्पावी
ஏப் 26, 2025 17:54

கதி சக்தி ஹைன். தேடிவந்து போட்டுத் தள்ளுது ஹைன்.


சங்கி
ஏப் 26, 2025 18:16

அடுத்தவனின் மரணத்தில் நக்கலா


N Sasikumar Yadhav
ஏப் 26, 2025 19:18

கோபாலபுர கொத்தடிமையான உமக்கு இப்படித்தான் கேவலமாக யோசிக்க தோணும்.


சமீபத்திய செய்தி