உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தற்காலிக பணியாளர்களுக்கு ஷாக் கொடுத்த கனடா அரசு

தற்காலிக பணியாளர்களுக்கு ஷாக் கொடுத்த கனடா அரசு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஒட்டவா: கனடாவுக்கு குடிபெயரும் தற்காலிக வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கை குறைக்க, அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. இது அதிகப்படியாக கனடாவில் வேலை செய்துவரும் இந்தியர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துமா என்று அச்சம் எழுந்துள்ளது.வட அமெரிக்க நாடான கனடாவில், கல்வி, தொழில், வேலை வாய்ப்புகள் அதிகம். அதனால் உலகம் முழுவதும் இருந்து ஆண்டு தோறும் லட்சக்கணக்கான பேர் கனடாவுக்கு செல்கின்றனர். இதில் இந்தியர்களும் கணிசமான எண்ணிக்கையில் உள்ளனர். இப்படி வெளிநாட்டினர் அதிக எண்ணிக்கையில் வருவதால் தங்கள் நாட்டினருக்கு பாதிப்பு ஏற்படுவதாக அந்த நாட்டு அரசு கருதுகிறது.

முதலீடு

இந்நிலையில், கனடாவுக்கு குடிபெயரும் தற்காலிக வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்க, கனடா அரசு முடிவு செய்துள்ளது என அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்தார். அவர் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,'' கனடாவில் குறைந்த ஊதியம், தற்காலிக வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்கிறோம். தொழிலாளர்கள் சந்தை மாறிவிட்டது. கனடா தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் மீது எங்கள் நாடு முதலீடு செய்வதற்கான நேரம் இது'' என குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

RAMKUMAR
ஆக 27, 2024 13:41

நம்ம தலைவர் சீமான் பதில் சொல்வார் . உதாரணம் என்றாலே கனடா பிரதமர்தான் .


Ramesh Sargam
ஆக 27, 2024 12:35

உங்கள் நாட்டில் போதிய படிப்பறிவு, திறமை உள்ளவர்கள் இல்லாமல் போனதால்தான் நீங்கள் நன்கு படித்த, திறமையுள்ள வெளிநாட்டினருக்கு இடம் கொடுத்தீர்கள். இப்பொழுது அவர்கள் தேவை அந்தளவுக்கு தேவையற்றதாகிவிட்டது. ஆகையால் அவர்கள் வெளியே அனுப்ப பார்க்கிறீர்கள். இது சரியா? தேவைப்பட்டால் வேண்டும். இல்லாவிட்டால் வெளியே நடையைக்கட்டவேண்டும். இது சரியா?


Anu Sekhar
ஆக 27, 2024 17:30

சரிதான். அவங்க அவங்களுக்கு தன் நாடு தான் முக்கியம். நாம்தான் ஓட்டுக்காக முஸ்லிம்களை வரவேற்கிறோம்.


puvanenthiran
ஆக 28, 2024 02:42

இங்கு போதியளவு திறமையுள்ளவர்கள் அதிகமாக இருக்கிறார்கள். இந்தியர்கள் வந்துதான் கனடாவை உயர்ர்த்தவேண்டும் என்ற நிலையில் கனடா இல்லை. படிக்கவருகிறோம் எனும் போர்வையில் வேலை வாய்ப்புத்தேடியே இந்தியர்கள் இங்கு வருகிறார்கள். மாணவர் விசாவில் வரும் அதிகளவான மாணவர்களுக்கு போதிய ஆங்கில அறிவு கிடையாது. 15 வருடத்திற்கு முதல் வந்த இந்திய இளைஞர்கள் இப்போது பல நிறுவனங்களில் குறைக்க சம்பளத்தில் வேலை செய்வதால் அவர்களின் சிபாரிடன் இவர்களுக்கு குறைந்த சம்பளத்துடன் வேலை கிடைத்துவிடுகிறது. முதலில் இந்திய மாணவர்களை வெளியேற்றினாலே இங்குள்ளவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை