உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டிரம்ப் - புடின் பேச்சு: மத்திய அரசு வரவேற்பு

டிரம்ப் - புடின் பேச்சு: மத்திய அரசு வரவேற்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ரஷ்ய அதிபர் புடினுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் அடுத்தவாரம் நடத்தவுள்ள பேச்சுக்கு, நம் வெளியுறவுத்துறை வரவேற்பு தெரிவித்துள்ளது. ரஷ்யா - உக்ரைன் இடையே கடந்த மூன்று ஆண்டுகளாக நடக்கும் போர், இன்னும் முடிவுக்கு வரவில்லை. இந்த நிலையில் உக்ரைன் உடனான மோதலை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்காவின் அலாஸ்காவில், வரும் 15ல் அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் புடின் ஆகியோர் பேச்சு நடத்த உள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டது. ரஷ்யாவின் இந்த முடிவுக்கு நம் வெளியுறவு அமைச்சகம் வரவேற்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக நம் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளார் ரன்தீர் ஜெய்ஸ்வால் நேற்று வெளியிட்ட அறிக்கை: உக்ரைன் உடனான மோதலை முடிவுக்கு கொண்டு வர ஆக.,15ல் அமெரிக்காவின் அலாஸ்காவில் ரஷ்யா - அமெரிக்கா இடையே பேச்சு நடத்த முடிவு செய்யப்பட்டதை இந்தியா வரவேற்கிறது. இந்த முடிவு, உக்ரைனில் நடந்து வரும் மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும் அமைதி திரும்புவதற்கும் உறுதியளிக்கிறது. 'இது போரின் சகாப்தம் அல்ல' என பிரதமர் மோடி பல சந்தர்ப்பங்களில் கூறியுள்ளார். இந்த பேச்சுக்கான அனைத்து உதவியையும் இந்தியா செய்யும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

k.Ravi Chandran, Pudukkottai
ஆக 10, 2025 13:57

உக்ரைன், ரஷ்யா போர் நிறுத்தம் தொடர்பாக சம்மந்தம் இல்லாத டிரம்பர் வெட்டி பேச்சு வார்த்தை. புடின், டிரம்பர் பேச்சுவார்த்தைக்கு பிறகு இப்போது மன நோயாளியின் பாய்ச்சல் உக்ரைன் மீது இருக்கும். இதற்கிடையே பாகிஸ்தான் ராணுவ தளபதி மூனீரை உலக சமாதானம் குறித்து பேச மீண்டும் இரண்டாவது முறையாக அழைத்திருக்கிறார் நோபல் பரிசு நோயாளி டிரம்பர். இரண்டாம் உலகப் போருக்கு பிறகு இந்த உலகில் மீண்டும் அணு ஆயுதப் போர் மூண்டால் அதற்கு காரணம் தானே இந்த உலகின் சர்வாதிகாரி என தன்னை நினைத்துக் கொள்ளும் இந்த டிரம்பாகத்தான் இருக்க முடியும்.


திருமங்கை
ஆக 10, 2025 12:24

கப்பலில் பாதி பாக்கு என்னோடதுன்னு எழுதி வாங்குனாப்புலா...


போராளி
ஆக 10, 2025 07:11

உக்ரைன் ரஷியா ரெண்டு பார்ட்டியும் சண்டை போட்டு மாய்ஞ்சு போச்சு. ஆயிலை அடிமாட்டு விலைக்கு வித்து ரஷியா காய்ஞ்சு போச்சு. இது போருக்கான நேரமில்லைன்னு உலகநாடுகள் கத்தி கத்தி குரலே போச்சு. போருக்கான ஆய்தம் வாங்க ரெண்டு ஆர்ட்டி கிட்டேயும் காசில்லே. போர் நின்னாத்தான் ஆயில் வாங்குற நாடுகளுக்கு சங்கடம். மத்தபடி அமைதியில் யாரும் இப்போ மஞ்சள் குளிக்க முடியாது.


ஜெய்ஹிந்த்புரம்
ஆக 10, 2025 05:43

உக்ரைனியர்கள் இல்லாமல் உக்ரைன் எதிர்காலத்தை தீர்மானிப்பதா:பிரான்ஸ் அதிபர் எதிர்ப்பு. அவரு தில் உள்ள அதிபர். நாம?


SUBBU,MADURAI
ஆக 10, 2025 06:31

அதே போல் உனக்கு தில் இருந்தால் நீ உன் ஒரிஜினல் பெயரில் கருத்தை போடு பாப்போம்!


vivek
ஆக 10, 2025 08:36

மட சாம்பிராணி


naranam
ஆக 10, 2025 03:42

இந்தக் கருத்தைப் பதிவு செய்வதன் மூலம் மத்திய அரசு என்ன சொல்லவருகிறது? இது போன்ற தேவையற்ற கருத்துகளைக் கூறாமல் இருப்பதே நல்லது. பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை