உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டிரம்ப் வரி மிரட்டல் எதிரொலி : ரஷ்யா செல்கிறார் அஜித்தோவல்

டிரம்ப் வரி மிரட்டல் எதிரொலி : ரஷ்யா செல்கிறார் அஜித்தோவல்

புதுடில்லி: ' ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் கொள் முதல் செய்து வரும் விவகாரத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் மேலும் வரியை உயர்த்த போவதாக 24 மணி நேர கெடுவிதித்துள்ள நிலையில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ரஷ்யா பயணம் மேற்கொள்ள உள்ள தகவல் வெளியாகியுள்ளது.ரஷ்யாவிடம் இருந்து இந்தியா தொடர்ச்சியாக அதிகளவில் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்து வருவதால் அந்நாட்டின் பொருட்களுக்கு ஏற்கனவே விதித்த, 25 சதவீத வரியை, அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் உயர்த்தப் போகிறேன்,'' என, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மிரட்டல் விடுக்கும் விதமாக தெரிவித்துள்ளார். இதன் மூலம், 24 மணி நேரத்திற்குள் முடிவை மாற்றிக் கொள்ளும்படி, இந்தியாவுக்கு அவர் மறைமுக எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த விவகாரத்தில் மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுக்க போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் நேற்று திடீர் திருப்பமாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், அவசர பயணமாக ரஷ்யா செல்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தோவலை தொடர்ந்து விரைவில் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரும் ரஷ்யா செல்கிறார். இந்திய -ரஷ்யா நட்புறவை வலுப்படுத்தும் விதமாக இருவரும் அமெரிக்காவின் வரி மிரட்டல் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

சங்கி
ஆக 06, 2025 11:21

இது தொடை நடுங்கி கான்-கிராஸ் ஆட்சி இல்லை. அமெரிக்காவின் கணக்கு தப்பு. எக்காரணம் கொண்டும் இந்தியா அடிபணியாது. எந்தநாட்டையும் நம்பி இந்தியா இல்லை. நம்மை நம்பியே உலகமே இருக்கிறது. இங்கிருக்கும் சில அந்நிய கூலிகளால் இந்தியா மற்றவர்களை சார்ந்துள்ளது போன்ற மாயை ஏற்படுத்தப்படுகிறது.


தாமரை மலர்கிறது
ஆக 06, 2025 05:22

அமெரிக்காவிற்கு பயந்து, ரஷிய கச்சா எண்ணையை புறக்கணிக்க முடியாது. ஐரோப்பிய நாடுகள் ரசியாவிடமிருந்து காஸ் வாங்கிறது. இந்தியா வாங்கினால் மட்டும் ட்ரம்பிற்கு கோவம் வருகிறது. சீனாவை போன்று தைரியமாக இந்தியா செயல்படும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை