உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அரசு பஸ்சில் பிறந்த இரட்டை குழந்தைகள்

அரசு பஸ்சில் பிறந்த இரட்டை குழந்தைகள்

ராம்நகர் : கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ்சில் பயணம் செய்த கர்ப்பிணிக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தன. ராம்நகர் மாவட்டம், ஹுன்சனஹள்ளியை சேர்ந்தவர் ராய்சா பானு. ஏழு மாத கர்ப்பிணியாக இருந்தார். நேற்று முன்தினம் கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ்சில் தொட்ட கபள்ளி கிராமத்துக்கு, கணவர், இரு மகள்களுடன் சென்று கொண்டிருந்தார்.திடீரென அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. மருத்துவமனைக்கு செல்வதற்குள் ஆண், பெண் என இரட்டை குழந்தைகள் பிறந்தன. பஸ்சில் இருந்த பெண்கள் உதவி செய்தனர். தாலுகா மகப்பேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.குழந்தைகள் எடை குறைவாக இருந்ததால், ஆம்புலன்ஸ் மூலம், பெங்களூரு வாணிவிலாஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். குழந்தைகள் இருவரும் ஐ.சி.யு.,வில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். தாய் நலமுடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை