உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரூ.22 லட்சம் கஞ்சா கடத்திய இருவர் கைது

ரூ.22 லட்சம் கஞ்சா கடத்திய இருவர் கைது

மோகன் கார்டன்: 21.5 லட்ச ரூபாய் மதிப்புள்ள கஞ்சாவுடன் ராஜஸ்தானை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.டில்லியில் போதைப் பொருள் விற்கப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில் சிறப்பு போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்தனர். கடந்த மாதம் 23ம் தேதி விஹார் மோகன் கார்டன் பகுதியை சுற்றி வளைத்த போலீசார், அங்கு சந்தேகப்படும்படி இருந்த இருவரை பிடித்தனர்.அவர்களிடம் விசாரித்தபோது, அவர்கள் கஞ்சா விற்க முயன்றது தெரிய வந்தது. ராஜஸ்தானைச் சேர்ந்த அவர்களிடம் இருந்து 21.5 லட்சம் மதிப்புள்ள 21.6 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த காரில் கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருந்தது.இருவரும் ராஜஸ்தானின் அல்வாரில் வசிக்கும் கமல் சிங், 33, அசோக் குமார், 26, என்பது தெரிய வந்தது. கமல் சிங் மீது போதைப் பொருள் கடத்தல், ஆயுதங்கள் வைத்திருத்தல், கொலை முயற்சி உள்ளிட்ட 25 வழக்குகள் உள்ளன.அசோக் மீது மூன்று திருட்டு வழக்குகள் உள்ளன. இவர்கள் இருவரும் டில்லி, ராஜஸ்தான், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் போதைப்பொருள் கடத்தி விற்று வந்தது தெரிய வந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை