உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜி.எஸ்.டி., மோசடி இருவர் சிக்கினர்

ஜி.எஸ்.டி., மோசடி இருவர் சிக்கினர்

புதுடில்லி:தென்மேற்கு டில்லியில், போலி பில் சமர்ப்பித்து, ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரியில் மோசடி செய்த வழக்கறிஞர் உட்பட இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.ஹரியானா மாநிலம் பானிபட் நகரைச் சேர்ந்தவர் சந்தீப்,27. புதுடில்லி புராரியில் வசிப்பவர் வழக்கறிஞர் இந்தர்பால்,45.போலி ஜி.எஸ்.டி., கணக்குகளை உருவாக்கிய இருவரும் மற்றவர்களின் பான் கார்டுகள், ஆதார் கார்டுகள், சிம் கார்டுகள், வாடகை ஒப்பந்தங்கள் மற்றும் மின்னஞ்சல் போன்ற உண்மையான அடையாள ஆவணங்களைப் பயன்படுத்தினர். பின், போலி பில்கள் சமர்ப்பித்து, கோடிகணக்கில் ஜி.எஸ்.டி., வரிப்பணத்தை மோசடி செய்தனர்.இதுகுறித்து, சுமித் என்பவர் கொடுத்த புகாரில், “என் பான் கார்டைப் பயன்படுத்தி ஜி.எஸ்.டி., கணக்கு துவக்க விண்ணப்பித்தேன். ஆனால், என் பெயரில் ஏற்கனவே இரண்டு ஜி.எஸ்.டி., எண்கள் இருந்தன. என் ஆவணங்களைப் பயன்படுத்தி வேறு யாரோ ஜி.எஸ்.டி.,யில் மோசடி செய்து வருகின்றனர்,”என, கூறியிருந்தார்.இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார், பானிபட்டில் கைது செய்யப்பட்ட சந்தீப்பிடம் நடத்திய விசாரணை அடிப்படையில், உத்தர பிரதேச மாநிலம் கைரானாவில் பதுங்கி இருந்த வழக்கறிஞர் இந்தர்பால் கைது செய்யப்பட்டார். இருவரிடமும் விசாரணை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை