உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அணையில் விழுந்து இரு சிறுமியர் பலி

அணையில் விழுந்து இரு சிறுமியர் பலி

திருச்சூர்; கேரள மாநிலம் திருச்சூர் புறநகர் பகுதியான பீச்சி பகுதியை சேர்ந்த சிறுமி நிமா, 7. இவரது சகோதரி ஹிமாவுடன் படிக்கும் சக தோழியர், திருச்சூரை சேர்ந்த அன்னி கிரேஸ், 16, அலீனா, 16, ஐரீன், 16, ஆகிய மூவரும் பீச்சியில் நடைபெற்ற சர்ச் திருவிழாவுக்கு வந்தனர்.அப்போது அருகேயுள்ள பீச்சி அணையை பார்வையிட சிறுமி நிமா மற்றும் அன்னி கிரேஸ், அலீனா, ஐரீன் ஆகியோர் சென்றனர். அப்போது அணையின் பாறையில் நின்று பார்த்தபோது ஒருவர் தவறி விழுந்தார். இவரை காப்பாற்றுவதற்காக மற்றவர்களும் நீருக்குள் இறங்கினர். அவர்களும் நீருக்குள் மூழ்கினர். அவர்களது அலறல் கேட்டு அப்பகுதியினர் விரைந்து சென்று நான்கு பேரையும் மீட்டனர். அவர்கள் திருச்சூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி அலீனா, அன்னி கிரேஸ் இறந்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி