உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / விதிமீறல்களில் ஈடுபட்ட இரண்டு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் சஸ்பெண்ட்: கேரள அரசு அதிரடி

விதிமீறல்களில் ஈடுபட்ட இரண்டு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் சஸ்பெண்ட்: கேரள அரசு அதிரடி

திருவனந்தபுரம்: கேரள மாநில தொழில்துறை இயக்குநர் கே.கோபாலகிருஷ்ணன், விவசாயத்துறைக்கான சிறப்பு செயலாளர் பிரசாந்த் ஆகியோரை, விதிமீறல்களில் ஈடுபட்டதற்காக அம்மாநில அரசு சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டு உள்ளது.கேரளாவை சேர்ந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி கே. கோபாலகிருஷ்ணன், திருவனந்தபுரம் மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், வாட்ஸாப் செயலி பயன்பாட்டுக்கான, தன் மொபைல் எண்ணை யாரோ 'ஹேக்' செய்துவிட்டதாகவும், அந்த எண்ணில் இருந்து பல்வேறு அதிகாரிகளை சேர்த்து, ' ஹிந்து கம்யூனிட்டி குரூப்' என்ற பெயரில் வாட்ஸாப் குழு துவங்கி உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த விபரம் தெரியவந்ததும், அந்த குழுவை உடனடியாக கலைத்துவிட்டதாகவும் அந்த எண்ணில் இருந்து 'மல்லு ஹிந்து ஆபீசர்ஸ்', 'மல்லு முஸ்லிம் ஆபிசர்ஸ்' என்ற பெயரிலும் குழுக்கள் துவக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இது குறித்து விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட்டது. அதிகாரிகள் விசாரணையில், கோபாலகிருஷ்ணன் மொபைல் போன் 'ஹேக்' செய்யப்படவில்லை என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவரை சஸ்பெண்ட் செய்து மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது.அதேபோல், கூடுதல் தலைமைச் செயலாளர் ஜெயதிலக்கை சமூக வலைதளம் மூலம் பிரசாந்த் விமர்சனம் செய்து வந்தார். மேலும் தனது உத்தரவுகளை மதிக்காத கீழ்நிலை அதிகாரிகளின் எதிர்காலத்தை ஜெயதிலக் சீர்குலைப்பதாகவும், அவரது மனநிலை சரியில்லை எனவும் பிரசாந்த் குற்றம்சாட்டியிருந்தார். இது தொடர்பாக ஜெயதிலக் புகார் அளித்து இருந்தார். இதனையடுத்து பிரசாந்த்தையும் மாநில அரசு சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

GMM
நவ 12, 2024 19:26

வாட்ஸ் ஆப் செயலி பயன்பாட்டிற்கு இன்டர்நெட் போதும். மொபைல் எண் அவசியம் இல்லை. ? பாஸ் கி , இ மெயில் போன்ற பாதுகாப்பு அம்சங்கள் வாட்ஸ் ஆபில் உண்டு. கேக் புகார், விசாரணை இரண்டும் போலி. மாநில நிர்வாக உயர் பதவி, இந்திய ஆட்சி பணி . அதே தகுதியுள்ள அதிகாரி சஸ்பெண்ட் செய்ய முடியாது. கவர்னர் , மத்திய அரசு மட்டும் தான் சஸ்பெண்ட் செய்ய முடியும்.


ஆரூர் ரங்
நவ 12, 2024 17:54

இங்கு கூட ஐஏஎஸ் அதிகாரி உமாசங்கர் ஊர் ஊராக கிறித்தவப் பிரச்சாரம் செய்தார்.( இத்தனைக்கும் தன்னை ஹிந்து SC எனக்கூறி நியமனம் பெற்றவர்).என்ன நடவடிக்கையெடுக்கப்பட்டது?. கம்மி நாட்டில் கோபாலகிருஷ்ணன் பிழைக்கத் தெரியாத ஆசாமி.


morlot
நவ 12, 2024 17:47

When religion mingle with administrative officers,public education, it is a dangerous sign to country. Otherwise india will become like arabian muslim countries against jewish israel. So,it is better people must keep their religious emotion inside their hearts. Otherwise the country will become wartields.


என்றும் இந்தியன்
நவ 12, 2024 17:35

அவர்கள் இந்துக்கள் என்பதால் இந்த அதிரடி நடவடிக்கை என்ன முஸ்லீம் மருமகன் மாமனார் பினராயி சரிதானே


sundarsvpr
நவ 12, 2024 17:09

அரசு அலுவலங்களில் உடல் உழைப்பு குறைத்துவிட்டது. இதனால் உடலின் மற்றுஒரு முக்கிய உறுப்பு மனசு செயலிழந்துவிட்டது சரியான நிலையில் ஆத்மா சிந்திக்கவில்லை . தவறுகள் நடக்கின்றன இன்று கையடக்க கருவிதான் எஜமானன். இதன் ஆர்ப்பாட்டம் குறைந்தால்தான் செய்திடும் பணிகளில் நிறைவு தெரியும். எழுதுதல் படித்தல் சிறுவயதில் இருந்து உலகை விட்டு செல்லும்வரை இருக்கவேண்டும்.


duruvasar
நவ 12, 2024 16:35

கோவில் மணி ஓசை தன்னை.... செய்ததாரோ... அவர் என்ன பேரோ... பரஞ்சோதி பரஞ்சோதி


Smba
நவ 12, 2024 16:02

இங்க ஆள்வது விடியல்


சமீபத்திய செய்தி