மேலும் செய்திகள்
வெ.இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி; இந்தியா இன்னிங்ஸ் வெற்றி
6 hour(s) ago | 2
துர்கா சிலைகளுடன் குளத்தில் டிராக்டர் கவிழ்ந்து 11 பேர் பலி
12 hour(s) ago
ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் நக்சலைட் நடமாட்டம் அதிகமுள்ளது. இங்குள்ள காஹேர் துல்ஹத் கிராமத்தில் நேற்று நக்சலைட்கள் பயங்கர ஆயுதங்களுடன் புகுந்து, பொதுமக்கள் மீது கொடூர தாக்குதல் நடத்தினர்.இதில் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். தகவல் அறிந்து விரைந்து சென்ற போலீசார் உடல்களை கைப்பற்றி விசாரணை நடத்தினர். போலீசாருக்கு தங்களைப் பற்றிய தகவல்களை கொடுத்ததாக சந்தேகித்து, இருவரையும் நக்சலைட்கள் கொலை செய்திருக்கலாம் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இது தொடர்பாக அதிகாரி ஒருவர் கூறுகையில், 'தங்கள் ஆதிக்கமுள்ள பகுதியை இழந்து வருவதால் ஆத்திரமடைந்த நக்சலைட்கள் அப்பாவி பொதுமக்களை சுட்டுக் கொல்கின்றனர்' என்றார்.
6 hour(s) ago | 2
12 hour(s) ago