உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பெண்ணை துப்பாக்கியால் சுட்ட இருவர் பிடிபட்டனர்

பெண்ணை துப்பாக்கியால் சுட்ட இருவர் பிடிபட்டனர்

புதுடில்லி:பெண்ணை துப்பாக்கியால் சுட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். காயம் அடைந்த பெண் சிகிச்சை பெற்று வருகிறார். புதுடில்லி வசந்த் லோகில், அழகு சாதனப் பொருட்கள் விற்பனை நிலைய மேலாளராக பணிபுரியும் பெண் ஜூலை, 30ம் தேதி மாலை ஆட்டோவில் சென்றார். ஆட்டோவை பின் தொடந்து பைக்கில் வந்த இருவர், ஆட்டோவை வழிமறித்து, ஆட்டோவுக்குள் அமர்ந்திருந்த பெண்ணை துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பினர். ஆட்டோ டிரைவர் ரஞ்சித் யாதவ் கொடுத்த தகவலையடுத்து, விரைந்து வந்த வசந்த் விஹார் போலீசார், எய்ம்ஸ் மருத்துவமனையில் அந்தப் பெண்ணை சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து, வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். கடந்த ஆண்டு அபுசைர் சபி, 30, என்பவர் மீது, அந்தப் பெண் கிரிமினல் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சபி, சமீபத்தில் ஜாமினில் வந்தார். இந்நிலையில், அமன் சுக்லா என்பவருடன் சேர்ந்து, தன் மீது புகார் கொடுத்த பெண்ணை கொலை செய்ய முயற்சித்துள்ளார் என்பது விசாரணையில் தெரிய வந்தது. இருவரையும் கைது செய்த போலீசார் துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை பறிமுதல் செய்தனர். இருவரிடமும் விசாரணை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை