மேலும் செய்திகள்
மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு
29-Mar-2025
வாகனம் மோதி தொழிலாளி பலி
05-Mar-2025
சிம்டேகா : ஜார்க்கண்டில் இருவேறு இடங்களில், காட்டு யானைகள் மிதித்து கொன்றதில் இரண்டு பேர் பலியாகினர். ஜார்க்கண்டில் சிம்டேகா மாவட்டத்தின் புருர்கி டெபாத்லியைச் சேர்ந்தவர் விகாஸ் ஓஹ்தர், 28. இவர், நேற்று முன்தினம் தன் வீட்டின் வெளிப்புறத்தில் படுத்து உறங்கினார். அப்போது, அருகே இருந்த வனப்பகுதியில் இருந்து வந்த யானை, விகாசை மிதித்து தாக்கிவிட்டுச் சென்றது. படுகாயமடைந்த விகாஸ், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதேபோல் ஜமாங் கிராமத்தைச் சேர்ந்தவர் சிபிராயா லுகான், 45, என்ற பெண், தன் வீட்டின் அருகே உள்ள வனப்குதிக்கு பூக்கள் பறிக்க சென்றார்.அப்போது அங்கு வந்த யானை அவரை மிதித்து கொன்றது. இதில், சம்பவ இடத்திலேயே சிபிராயா உயிரிழந்தார்.இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
29-Mar-2025
05-Mar-2025