உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / குளியல் அறை கீசரில் வாயு கசிவு: மூச்சு திணறி இரு சகோதரிகள் மரணம்

குளியல் அறை கீசரில் வாயு கசிவு: மூச்சு திணறி இரு சகோதரிகள் மரணம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மைசூரு: கர் நாடகாவில், குளியல் அறைக்குச் சென்ற இரு சகோதரிகள், 'கீசர்' எனப்படும் வெந்நீர் வழங்கும் மின்னணு சாதனத்தில் இருந்து கசிந்த, 'கார்பன் மோனாக்சைடு' வாயுவை தொடர்ந்து சுவாசிக்க நேரி ட்டதால், மூச்சுத் திணறி உயிரிழந்தனர். கர்நாடகாவின், மைசூரு மாவட்டம், பிரியாபட்டணாவின் ஜோனிகேரி பகுதியைச் சேர்ந்தவர் அல்தாப் பாஷா. இவருக்கு நான்கு மகள்கள். இரு மகள்களுக்கு திருமணமாகிவிட்டது. குல்பம் தாஜ், 23, சிம்ரன் தாஜ், 21, ஆகிய இரு மகள்கள் மற்றும் மனைவியுடன் அல்தாப் பாஷா வசித்து வந்தார். சமீபத்தில் குல்பம் தாஜுக்கு நிச்சயதார்த்தம் நடந்தது. வீட்டில், கடந்த 23ம் தேதி சுப நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த து. மணமகன் வீட்டினரும் வந்திருந்தனர். அன்றிரவு, 7:00 மணியளவில் சகோதரிகள் இருவரும் ஒன்றாக குளிக்கச் சென்றனர். நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. சந்தேகம்அடைந்த பெற்றோர் குளியல் அறை கதவை உடைத்து பார்த்தபோது, இருவரும் மயங்கிக் கிடந்தனர். உடனடியாக, அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள், இருவரும் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். பிரியாபட்டணா போலீசார் விசாரிக்கின்றனர். பிரேத பரிசோதனை செய்த டாக்டர் பிரமோத் குமார் கூறுகையில், “குளியல் அறையில், கீசரில் இருந்து கார்பன் மோனாக்சைடு கசிந்துள்ளது. இதை சுவாசித்த இளம்பெண்கள் மூச்சுத்திணறி இறந்ததாக தெரிகிறது. ''எனவே, குளியல் அறையில் கீசரை பயன்படுத்தும்போது, மக்கள் கவனமாக இருக்க வேண்டும். குளியல் அறையில் வென்டிலேட்டர் உள்ள இடத்தில் கீசர் வையுங்கள்,” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

பேசும் தமிழன்
அக் 26, 2025 15:59

நம்புற மாதிரி இல்லையே..... இதில் ஏதோ மர்மம் உள்ளது போல் தெரிகிறது.


JaiRam
அக் 26, 2025 13:27

ஒன்றாக சென்றார்கள் எலெக்ட்ரிசிக் ஹீட்டரில் வாய்வு கசிவு கதை நம்பும்படி இல்லை


Rathna
அக் 26, 2025 09:38

ஒரே மர்ம சம்பவமா இருக்கு


அப்பாவி
அக் 26, 2025 09:25

நம்புற மாதிரி இல்லியே?


kumarkv
அக் 26, 2025 08:10

Even if the geyser contained CO gas, the quantity contained in that is not sufficient enough to cause death. It must be from the bathroom drain which is connected to the septic tank or drainage tem, blocked and caused the gas to flow back flow of accumulated gas to fill up the bathroom, even before they entered the bathroom. Such a large quantity can only cause death.


Senthoora
அக் 26, 2025 07:30

போலீசார் விசாரிக்கணும், இரண்டுபேரும் ஒன்னாக குளிக்க எதுக்குபோகணும். ஒருவருக்கு மூச்சு திணறல் ஏட்பட்டால் மற்றவராவது கதவை திறந்து வந்திருக்கலாம், சாதாரணம் ஒரு வாயு வாசனை வரும்போது உஷாராகி பத்திருக்கணும். வாயு கசிவால் பொஆர்டி கதவை தட்டி அல்லது திருந்து ஓரளவு தப்பி இருக்கலாம், இது சாதியாக, கொலை செய்யப்பட்டதுக்கு 80% மேல் நம்ப சான்ஸ் இருக்கு.


Raman
அக் 26, 2025 06:58

Neat water heating, unlikely to produce any CO, carbon monoxide. Absolutely no way. However, if the unit contained lots of decomposed organics, accumulated over the years, there is some possibility that the organics could decompose to carbon dioxide and carbon monoxide. Overall, water heaters unlikely to generate toxic CO.


Natarajan Ramanathan
அக் 26, 2025 06:32

Unbelievable reason given. Both going together for bathing inside a bathroom is itself fishy. SOMETHING WRONG.


Perumal Pillai
அக் 26, 2025 06:10

No chance of an electric heater producing Carbon Monoxide. Something wrong somewhere.


Thadicombu Ganesan
அக் 26, 2025 06:49

Yes..... you are absolutely correct. Something wrong happen at that time.


visu
அக் 26, 2025 06:51

பொதுவாக இன்றைய ஹீட்டர்கள் மின்சாரத்தில் இயங்குகின்றன ஒருவேளை காஸ் இல் இயங்கும் ஹீட்டர் பயன்படுத்தினார்களா தெரியவில்லை


Senthoora
அக் 26, 2025 07:38

I BELIVE ITS well-planned murder, FOR PROPERTY DIVIDING, THEY THINK NO ONE WILL SUSSPECT, RATHER THAN KILLING BY GASS COOKER


Mani . V
அக் 26, 2025 05:18

" .......அன்றிரவு, 7:00 மணியளவில் சகோதரிகள் இருவரும் ஒன்றாக குளிக்கச் சென்றனர்.......". இல்ல புரியல.


சமீபத்திய செய்தி