உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மஹா., எதிர்க்கட்சி கூட்டணியில் மோதல்: சரத்பவார் உதவியை நாடும் காங்., உத்தவ் தாக்கரே?

மஹா., எதிர்க்கட்சி கூட்டணியில் மோதல்: சரத்பவார் உதவியை நாடும் காங்., உத்தவ் தாக்கரே?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: மஹாராஷ்டிராவில் தொகுதி பங்கீட்டில் ஏற்பட்டு உள்ள பிரச்னையை தீர்க்க தலையிடும்படி தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவாரை காங்கிரஸ் மற்றும் உத்தவ் தாக்கரே தரப்பினர் வலியுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.மஹாராஷ்டிரா சட்டசபைக்கு ஒரே கட்டமாக நவ.,20ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. ஓட்டுகள் நவ.,23ல் எண்ணப்படுகின்றன. தற்போது பதவியில் உள்ள பா.ஜ., ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை தக்க வைப்பதில் உறுதியாக உள்ளன. இக்கூட்டணி, தொகுதி பங்கீட்டை முடித்துவிட்டது. பா.ஜ., முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு உள்ளது.அதேபோல், காங்கிரஸ், சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா எதிரணியில் மகா விஹாஸ் அகாடி கூட்டணி, கடந்த முறை பாதியில் பறி கொடுத்த ஆட்சியை இந்த முறை எப்படியாவது பிடித்துவிட வேண்டும் என முயன்று வருகிறது. ஆனால், தொகுதி பங்கீட்டில் காங்கிரஸ் உத்தவ் தாக்கரே இடையே சிக்கல் ஏற்பட்டு உள்ளது. மஹா., மாநில தலைவர்களுக்கு தொகுதி பங்கீடு குறித்து முடிவு எடுக்க தெரியவில்லை என உத்தவ் தாக்கரே தரப்பை சேர்ந்த சஞ்சய் ராவத் விமர்சித்து இருந்தார்.இந்த தேர்தலில் அதிக தொகுதிகளை எதிர்பார்க்கும் உத்தவ் தாக்கரே தரப்பினர், விதர்பா தொகுதியில் 12 தொகுதிகளை கேட்டு உள்ளது. ஆனால் இந்த தொகுதிகளை விட்டுக்கொடுப்பதில் காங்கிரஸ் தயக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது. இதனால், அங்கு தொகுதி பங்கீட்டில் முட்டுக்கட்டை ஏற்பட்டு உள்ளதாக தெரிகிறது.இது தொடர்பாக மும்பை வட்டாரங்கள் கூறியதாவது: தொகுதி பங்கீட்டில் சிக்கல் ஏற்பட்டதால், இரு தரப்பினரும் சரத்பவாரின் உதவியை நாடி உள்ளனர். இப்பிரச்னையில் தலையிட்டு சுமூக தீர்வு காண உதவ வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். சிவசேனாவை சேர்ந்த அனில் பராப் மற்றும் ஆதித்யா தாக்கரே சரத்பவாரை சந்தித்து உள்ளனர். மூத்த காங்கிரஸ் தலைவர்களும் சரத்பவாருடன் தொடர்பில் உள்ளனர். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

SRIDHAAR.R
அக் 21, 2024 07:33

பழைய பூனை தமிழ் கதை ஞாபகம் வருகிறது


Kasimani Baskaran
அக் 21, 2024 05:39

மிருகக்காட்சி சாலையில் உள்ள மிருகங்களிடம் குடும்பம் நடத்தி விடலாமே தவிர காங்கிரஸ் மற்றும் என்சிபியுடன் ஒரே நேரத்தில் குடும்பம் நடத்துவது சிக்கலானது என்பதை உத்தவ் புரிந்து கொண்டு இருப்பார்.


Constitutional Goons
அக் 21, 2024 04:33

அதானியும் தான் கொள்ளையடிக்கவும் பாஜவுக்காகவும் இவரைத்தான் நாடினார்


Ramesh
அக் 21, 2024 08:12

ரொம்ப மன வேதனையுடன் இருக்கிறீர்கள் போலும். அது இயற்க்கை தானே. மஹாவை கூறுபோட்டு ஏப்பம் விடும் கும்பல் தலைவன் பப்புவுக்கு கொஞ்சம் மண்டையில் உதிக்க வேண்டும்


Rajan A
அக் 20, 2024 22:47

நம்ம மீசை வேற இம்சை பண்ண அங்கே போட்டி போடப்போகிறார். காமெடி சானல் சப்ஸ்கிரிப்ஷன் கான்செல்


Rajan A
அக் 20, 2024 22:44

பிள்ளையை கிள்ளி விட்டவரே அவர்தானே