உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / விமர்சனத்தை தாங்க முடியாமல் பொய் வழக்கில் சவுக்கு சங்கர் கைது: திமுக அரசுக்கு மார்கண்டேய கட்ஜூ கண்டனம்

விமர்சனத்தை தாங்க முடியாமல் பொய் வழக்கில் சவுக்கு சங்கர் கைது: திமுக அரசுக்கு மார்கண்டேய கட்ஜூ கண்டனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ''விமர்சனத்தை சகித்துக் கொள்ள விரும்பாமல் சவுக்கு சங்கரை அப்பட்டமாக புனையப்பட்ட , ஜோடிக்கப்பட்ட மற்றும் இட்டுக்கட்டி, மிரட்டி பணம் பறித்ததாக போலீசார் கைது செய்துள்ளனர்,'' என சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜூ கூறியுள்ளார்.

கைது

நேற்று முன்தினம் ( டிச.,13) மதுபான 'பார்' உரிமையாளரை மிரட்டி பணம் பறித்ததாக கூறப்பட்ட புகாரில், 'யு டியூபர்' சவுக்கு சங்கரை, அவரது வீட்டின் கதவை உடைத்து போலீசார் கைது செய்தனர். அவரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டதற்கு அதிமுக பொதுச்செயலர் இபிஎஸ், தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஊழல்

கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜூ எழுதிய கட்டுரை ஒன்றில் கூறியுள்ளதாவது: இந்தியாவில் ஊழல் மலிந்துள்ளது. ஆனால், சமீப நாட்களாக இதில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது. ஊழல் இல்லாமல் எதுவும் நடக்காத மாநிலம் என்ற பெருமையை பெற்றுள்ளது. இந்தியாவில் மிகவும் ஊழல் நிறைந்த குடும்பத்தால் ஆளப்படும் மாநிலமாகவும் தமிழகம் திகழ்கிறது.

காமராஜர் முதல்வராக இருந்தபோது இருந்த தமிழகத்தின் பொற்காலத்தை, இந்தியாவின் சிறந்த மாநிலம் என முன்னாள் பிரதமர் நேருவால் புகழப்பெற்றது. தற்போது அதற்கு மாறுபட்ட நிலை நிலவுகிறது. நேர்மைக்கு ஒரு உதாரணமாக காமராஜர் திகழ்ந்தார்.

பாசிச ஆட்சி

தங்கள் ஊழல் மற்றும் பிற தவறுகளுக்கு எதிரான எந்தவொரு எதிர்ப்பையோ அல்லது விமர்சனத்தையோ சகித்துக்கொள்ள விரும்பாத ஆளும் புதிய பாசிச திமுக ஆட்சி, மாற்றுக்குரலையும் அடக்குவதற்காக மாநிலத்தில் ஒரு பயங்கரவாத ஆட்சியை கட்டவிழ்த்துவிட்டுள்ளது.தமிழகத்தில் துணிச்சலான, நேர்மையான மற்றும் பிரபலமான யூடியூபர் ஆக சவுக்கு சங்கர் உள்ளார். அவர் தொடர்ந்து திமுக அரசை கடுமையாக விமர்சனம் செய்து அதன் பெரும் ஊழலை அம்பலப்படுத்தி வருகிறார். தாங்கள் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகளை பாதிக்கும் எந்தவொரு விமர்சனத்தையும் திமுக கடுமையாக எதிர்க்கிறது. விமர்சனத்தை சகித்துக் கொள்ள விரும்பாமல் சவுக்கு சங்கரை கடந்த 13ம் தேதி அப்பட்டமாக புனையப்பட்ட , ஜோடிக்கப்பட்ட மற்றும் இட்டுக்கட்டி மிரட்டி பணம் பறித்ததாக குற்றம்சாட்டி அவரது வீட்டில் வைத்து போலீசார் கைது செய்தனர்.

கண்டனம்

அதிமுக பொதுச்செயலாளர், தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் திமுக அரசை கண்டித்ததுடன், சவுக்கு சங்கரை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.'' தங்களுக்கு சாதகமாக இல்லாத பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள் மீது அரசு இயந்திரத்தை பயன்படுத்துகிறது,'' எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் குற்றம்சாட்டினார். மேலும் சவுக்கு சங்கரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனத் தெரிவித்து இருந்தார்.தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரனும், இந்த கைது நடவடிக்கையை கண்டித்ததுடன், திமுக அரசை பாசிச அரசு என விமர்சனம் செய்தார். கருத்து சுதந்திரத்தை நசுக்குவதாக குற்றம்சாட்டியிருந்தார்.திமுகவின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் எம்பி கார்த்தியும் சவுக்கு சங்கரின் கருத்துகளில் வேறுபட்டு இருந்த போதிலும் அவரை கைது செய்தது அப்பட்டமான துன்புறுத்தல் என விமர்சனம் செய்தார்.சவுக்கு சங்கர் கைதுக்கு பத்திரிகையாளர் ராதாகிருஷ்ணனும் கண்டனம் தெரிவித்துள்ளார். '' ஒருவரைக் கைது செய்யும்போது பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் உள்ளன, ஆனால் அது பாஜ, திமுக அல்லது சிபிஎம் அரசாக இருந்தாலும், அவர்களில் யாரும் இந்த நடைமுறைகளைப் பின்பற்றுவதில்லை. நீதிமன்றங்களும் இதை அரிதாகவே கேள்வி கேட்கின்றன. அரசை விமர்சனம் செய்ததால் தான் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ளார். திமுக அரசுக்கு எதிராக செயல்படும் சில போலீசார், மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதற்காகவே சவுக்கு சங்கர் போன்றவர்களை கைது செய்கின்றனர். இதை திமுக கவனத்தில் கொள்ள வேண்டும்'' எனத் தெரிவித்துள்ளார்.

வேண்டுகோள்

இந்த இழிவான மற்றும் அருவருப்பான செயலை கண்டித்து சவுக்கு சங்கரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என இந்தியாவின் ஒட்டுமொத்த ஊடகங்கள் மற்றும் பொது மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கின்றேன்.

இவ்வாறு அதில் கட்ஜூ கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 26 )

Harindra Prasad R
டிச 16, 2025 11:40

GRATE , நீதி இன்றும் நிலைத்திருக்கிறது..


N S
டிச 16, 2025 11:32

இந்த இழிவான மற்றும் அருவருப்பான செயலை தன்னிகரில்லா தரணி போற்றும் திராவிட மாடல் ஆட்சியில் மட்டும் தான், வீட்டில் பூட்டை உடைத்து நீதியை நிலை நிருத்த முடியும். உண்மையை சொல்ல விடமாட்டேங்குறாங்களே.


Barakat Ali
டிச 16, 2025 10:21

நியாயத்தைப் பேசும் கட்ஜுவைப் போன்ற நீதிபதிகள் மட்டுமே இன்றைய தேவை .......


SULLAN
டிச 19, 2025 22:16

ஹா ஹா எதுவுமே புரியாமல் கருத்து உருட்ட பிடாது.


Ajrjunan
டிச 16, 2025 09:12

இப்போ புரியுதா. சவுக்கை இயக்குவது யார் என்று. சவுக்கு, சீமான், தற்குறி, சின்ன மங்கா, எடுபுடி என்று ஓரு படையே அனுப்பினாலும் தி மு க இடது கையில் டீல் செய்துவிடும்.


Vijay
டிச 16, 2025 10:29

Innum moonu masamthan Ella dealingum.


நிவேதா
டிச 16, 2025 08:32

அரசின் சர்வாதிகாரத்தனமான போக்கு கண்டிக்கத்தக்கது . ஆனால் சவுக்கு போன்ற பிளாக்மெயில் செய்து பணம் சம்பாதிப்பவர்களுக்கு சவுக்கடி தேவையே


raja
டிச 16, 2025 07:45

நீயும் உன் குடும்பமும் ஒத்து ஊதி ஆடும் ஆட்டத்தால் உன் குலமே சர்வ நாசம் ஆகும் சோன முத்தா....


V RAMASWAMY
டிச 16, 2025 07:39

ஆலகால விஷம் போல் பெருகிவரும் இப்படிப்பட்ட அராஜக நிர்வாகம் தேவையா உங்களுக்கு வாக்காளர்களே, ஒரு சில ஆயிரங்களையும், ஒரு வாய் பிரியாணியையும் ஒரு பாட்டில் சாராயமும் பெற்றுக்கொண்டு நீங்கள் ஐந்து ஆண்டுகளுக்கு நிம்மதியாக இருக்கமுடியுமா? யோசியுங்கள, செயல்படுங்கள் இப்பொழுதிலிருந்தே.


Mani . V
டிச 16, 2025 05:06

தெரிஞ்சு போச்சா? உங்களுக்கும் தெரிஞ்சு போச்சா? கேடுகெட்ட அரசின் மொள்ளமாரித்தனம் உங்களுக்கும் தெரிஞ்சு போச்சா?


Kasimani Baskaran
டிச 16, 2025 03:55

திராவிடம் தெளிப்பது, மூன்றாவது மனிதனை வைத்து வழக்குப்போடுவது, கடப்பாரை வைத்து கதவை உடைத்து கைது செய்வது போன்றவை மூன்றாம் தர நடவடிக்கை.


Nanda Kumar
டிச 16, 2025 03:36

Thanks for your comments. your voice should reach the present Judges. The arrested journalist is a bold person.. He should be saved with out any injury by the DMK ruled, or favorite police officials.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை