உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / எதிர்க்கட்சிகள் திசை திருப்புவதாக மத்திய அமைச்சர் குற்றச்சாட்டு

எதிர்க்கட்சிகள் திசை திருப்புவதாக மத்திய அமைச்சர் குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: யு.ஜி.சி., எனப்படும் பல்கலை மானிய குழு, பல்கலை மற்றும் கல்லுாரிகளில் உயர் கல்வியின் தரத்தை நிர்வகிக்க ஆசிரியர் நியமனம் மற்றும் பதவி உயர்வுக்கு புதிய வரைவு விதிகளை வெளியிட்டது. தற்போது, 2018ல் வெளியிட்ட வழிகாட்டுதல்கள் அமலில் உள்ளன.இந்த வரைவு விதிகளை காங்கிரஸ் எம்.பி.,யும், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் நேற்று கடுமையாக விமர்சித்தார். எதிர்க்கட்சிகள் சார்பில் போராட்டங்களும் நடத்தப்பட்டு வருகின்றன.இந்நிலையில், இது குறித்து மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியதாவது: எதிர்க்கட்சித் தலைவர் உட்பட சில அரசியல் தலைவர்கள் முற்போக்கான கல்விச் சீர்திருத்தங்களை, தங்கள் காலாவதியான அரசியலுக்காக கற்பனை அச்சுறுத்தல்களை முன் வைப்பது துரதிர்ஷ்டவசமானது மற்றும் கவலைக்குரியது.யு.ஜி.சி., வரைவு விதிமுறைகள் யாருடைய குரலையும் நசுக்கவில்லை; அனைவரின் கருத்துகளையும் கேட்கிறது. நம் கல்வி நிறுவனங்களை பலப்படுத்துகிறது; பலவீனப்படுத்தவில்லை. நிறுவன சுயாட்சியையும், நம் மொழியியல் பன்முகத்தன்மையையும் நிலைநிறுத்துகிறது.ராகுல் மற்றும் அரசியல் சாசனத்தை காப்பவர்களாக கூறிக் கொள்பவர்கள் இதில் அரசியல் செய்வதற்கு முன், சிறிது நேரத்தை ஒதுக்கி வரைவு விதிகளை படித்து பார்க்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அவகாசம் நீட்டிப்பு!

யு.ஜி.சி., கடந்த மாதம் வெளியிட்ட ஆசிரியர் தேர்வுக்கான வரைவு அறிக்கை குறித்து கருத்து தெரிவிக்க, பொது மக்களுக்கு பிப்., 5 வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. பலரும் வரைவு அறிக்கையை முழுதாக படித்து கருத்து தெரிவிக்க மேலும் அவகாசம் தேவை என கூறினர். அதை ஏற்று, யு.ஜி.சி., செயலர் காலக்கெடுவை வரும் 28 வரை நீட்டித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

GMM
பிப் 07, 2025 09:13

பல்கலை மானிய வரைவு விதிகள் பற்றி முதலில் காங்கிரஸ் மற்றும் எதிர்ப்பவர்கள் தன் கருத்து கூற வாய்ப்பு. Draft, அதாவது வரைவு திருத்தத்திற்கு உட்படும். பிள்ளை பிறகும் முன் பெயர் வைக்கும் எதிர்க்கட்சி.


Kasimani Baskaran
பிப் 07, 2025 07:47

காலாவதியான - அருமையான வார்த்தை பிரயோகம். முதலில் ஜாமீனில் இருக்கும் எம்பிக்களை பாராளுமன்றத்தில் நுழைய விடக்கூடாது. ஜாமீன் நிபந்தனையை மீறினால் தயங்காமல் நீதிமன்றம் செல்ல வேண்டும்.


seshadri
பிப் 07, 2025 06:39

மோடி அரசாங்கத்தால் கொண்டு வரப்படும் எந்த ஒரு திட்டமாக இருந்தாலும் அதை கண்ணை மூடி கொண்டு எதிர்ப்போம். இதுதான் எங்களது நிலைப்பாடு. நாடு எக்கேடு கேட்டு குட்டி சுவராக போனாலும் எங்களுக்கு கவலை இல்லை. தமிழகத்தில் என்னவோ உயர் கல்வி அமோகமாக இருப்பதாக பீற்றி கொள்கிறார்கள் அனால் வலைக்கு இன்டெர்வியூவிற்கு செல்லும் போதுதான் அவர்களது லட்சணம் பல்லை இளிக்கிறது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை