உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அவசரத்தில் மனைவியை மறந்த மத்திய அமைச்சர்: கான்வாயுடன் யு டர்ன் அடித்து ஓட்டம்

அவசரத்தில் மனைவியை மறந்த மத்திய அமைச்சர்: கான்வாயுடன் யு டர்ன் அடித்து ஓட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஜூனாகத்: சாதாரணமாக மனைவியை ஓரிடத்தில் அமர வைத்துவிட்டு, ஏதோ நினைவில் கணவர் வேறு இடத்திற்கு புறப்பட்டு விட்டாலே போதும்; அந்த குடும்பத்தில் அடுத்து என்ன நிகழும் என்பதை யூகித்து விடலாம்.இப்படியொரு அனுபவம், பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகானுக்கு ஏற்பட்டுள்ளது.தன் துறை ரீதியான பணிக்காகவும், புனிதத் தலங்களுக்கு செல்லவும் மனைவி சாதனாவுடன் சிவ்ராஜ் சிங் சவுகான், குஜராத் சென்றிருந்தார்.தேசிய கிர் பூங்காவுக்கு மனைவியை அழைத்துச் சென்று சிங்கங்களை கண்டுகளித்த அவர், சோம்நாத் ஜோதிர்லிங்க தலத்தையும் தரிசித்தார்.பின், ஜூனாகத்தில் உள்ள நிலக்கடலை ஆய்வு மையத்தில், விவசாயிகள் மற்றும் லட்சாதிபதி மகளிர் திட்டப் பயனாளிகளுடன் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.அப்போது, ஆய்வு மையத்தின் காத்திருப்பு அறையில் மனைவி சாதனாவை அமர வைத்திருந்தார் சவுகான். இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சிக்குப் பின் ராஜ்கோட் செல்லவும், அங்கிருந்து இரவு விமானத்தையும் பிடிக்க வேண்டியிருந்தது. அதனால் அவசர அவசரமாக அவர் புறப்பட்டார். சவுகானின் அவசரத்தை பார்த்து அவருடன் வந்த 22 கார்கள் அடங்கிய கான்வாயும் ராஜ்கோட் நோக்கி சீறி பாய்ந்தன.வாகனங்கள் விமான நிலையம் நோக்கி வேகமெடுத்து 10 நிமிடங்கள் ஆன நிலையில் தான், மனைவி சாதனாவை காத்திருப்பு அறையில் அமர வைத்துவிட்டு வந்ததை உணர்ந்தார் சவுகான்.பதறிப் போன அவர், மீண்டும் தன் கான்வாயை திருப்பிக் கொண்டு ஜூனாகத் விரைந்தார். அங்கு மனைவியிடம் நடந்ததை சொல்லி சமாளித்துவிட்டு, ராஜ்கோட்டுக்கு புறப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

அப்பாவி
ஜூலை 21, 2025 08:19

ஆளுக்கு ஒரு சொகுசு விமானம் வாங்கி குடுத்துரலாம். மக்கள் காசுதானே..


ஆரூர் ரங்
ஜூலை 21, 2025 09:43

நேரு இந்திராவை எல்லா நாடுகளுக்கும் அரசு செலவில் அழைத்துச் சென்றார். ராஜிவ் தன் இத்தாலிய உற்றார் உறவினர் நண்பர்களுடன் பங்காரம் தீவுக்கு கடற்படை நீர்மூழ்கிக் கப்பலில் உல்லாசப் பயணம் சென்றார். அதெல்லாம் மறந்திருக்கும்.


RAAJ68
ஜூலை 21, 2025 06:55

அரசாங்க செலவுல ஊர சுத்தி பாக்கறீங்களா. மோடி ஜி உங்களுக்கே நியாயமா இருக்கா. நீங்கள் பல வெளிநாடுகளுக்கு போறீங்க. இங்கே ஊரை சுற்றி பார்க்காமல் போன வேலை முடிந்து அப்படியே திரும்பி வரீங்க உங்கள பாத்து அவங்க கத்துக்க வேண்டாமா


RAAJ68
ஜூலை 21, 2025 06:48

அநியாயம் சாதாரண மந்திரி கங்கு 22 கார்களா. ரொம்ப அதிகப்படியா தெரியலையா. மோடி ஜிக்கு இதெல்லாம் தெரியுமா


நிக்கோல்தாம்சன்
ஜூலை 21, 2025 06:19

செம காமெடி??


அப்பாவி
ஜூலை 21, 2025 05:07

22 கார்கள் எதுக்குய்யா? நாட்டில் ட்ராஃபிக் ஜாம் ஏற்படக் காரணம் இதுபோன்ற வெட்டி பந்தா அமைச்சர்கள்தான். பாவம் அம்மையார்.


naranam
ஜூலை 21, 2025 04:46

ஆனாலும் ஒரு அமைச்சருக்கே 22 வாகன ஊர்வலம் ரொம்ப அதிகம். பிரதமர் மோடி தனது அமைச்சர்களுக்கு சிக்கனத்தைக் கடைபிடிக்க உத்தரவிட வேண்டும்.


பெரிய குத்தூசி
ஜூலை 21, 2025 07:12

அமைச்சர் சிவ்ராஜ் சிங் அவர்கள் அடுத்த கான்டிஜென்சி பிரதமர் லிஸ்ட் ல் உள்ளவர். பிரதமர் உண்டான பாதுகாப்பு ப்ரோடோகால் படி வழங்கப்படவேண்டும். நம்மூரில் பொய்யா சொல்லிக்கிட்டு தெரியற முதல்வர் ஸ்டாலினுக்கு 100 காருக்கு மேலே போகுது, அல்லக்கை நாட்டைப்பற்றியோ, பொதுமக்களை பற்றியோ கவலைப்படாமல் கொள்ளையடிப்பதை நோக்கமாக கொண்ட தமிழக திமுக MLA, MP, மாவட்டம், அட திமுக கவுன்சிலர் 1 கோடி ரூவா காருல 10 காரு, 100 பைக் சூழாதானேப்பா வராங்க. அடுத்த பிரதமர் லிஸ்ட் ல இருக்கற அமைச்சர் நாட்டின் மீது அக்கறை கொண்ட நாட்டுப்பற்று கொண்ட அமைச்சர் கொண்ட சிவ்ராஜ் சிங் அவர்கள் பின் வரும் 22 கார் பெரிய விஷயம் இல்லே.


சமீபத்திய செய்தி