மேலும் செய்திகள்
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
5 hour(s) ago | 1
கன்டெய்னரில் கடத்திய ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல்
5 hour(s) ago
நிரூபித்துள்ளோம்!
6 hour(s) ago
உடுப்பி : ''உங்கள் ஆசியால் தான், மத்திய அமைச்சர் ஆனேன்,'' என, பா.ஜ., தொண்டர்கள் முன், மத்திய விவசாய இணை அமைச்சர் ஷோபா உருக்கமாக பேசினார்.உடுப்பி - சிக்கமகளூரு தொகுதி பா.ஜ., - எம்.பி.,யாக இருப்பவர் ஷோபா. மத்திய விவசாய இணை அமைச்சராகவும் பதவி வகிக்கிறார். லோக்சபா தேர்தலை முன்னிட்டு, உடுப்பியில் நேற்று முன்தினம் பா.ஜ., தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டது.அலுவலகத்தைத் திறந்து வைத்து, பா.ஜ., தொண்டர்கள் முன், ஷோபா பேசியதாவது:உடுப்பி மக்கள் என்னை இரண்டு முறை, எம்.பி., ஆக்கி, லோக்சபாவுக்கு அனுப்பி வைத்தனர். இதற்கு பா.ஜ., தொண்டர்களாகிய உங்கள் ஆசியே காரணம். நீங்கள் அனைவரும், எனக்காக உழைத்து வெற்றி பெற வைத்தீர்கள். பிரதமர் மோடி என்னை அடையாளம் கண்டு, மத்திய அமைச்சர் பதவி கொடுத்தார். ஊழலற்ற நிர்வாகத்தை கொடுத்து வருகிறேன்.மோடி பிரதமராக உள்ள, பா.ஜ.,வில் நாம் இருக்கிறோம் என்பது, பெருமையான விஷயம். யாருடனும் சமரசம் செய்து கொள்ளாமல், நேர்மையாக பணியாற்றி இருக்கிறேன்.நான் உடுப்பி - சிக்கமகளூரு மாவட்டத்தைச் சேர்ந்தவள் இல்லை. ஆனாலும் என்னை இரண்டு முறை, வெற்றி பெற வைத்தீர்கள். பெங்களூரு யஷ்வந்த்பூர் மக்களுக்கு, எனக்கு ஆசி வழங்கினர். கட்சி சொல்வதைத் தட்டாமல் கேட்கிறோம்.உடுப்பி - சிக்கமகளூரு பா.ஜ., 'சீட்' கேட்டு, சிலர் அலைகின்றனர். அவர்களுக்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மீண்டும் எனக்கு 'சீட்' கிடைக்கும். என்னை வெற்றி பெற வைப்பீர்கள் என்று நம்பிக்கை உள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.
5 hour(s) ago | 1
5 hour(s) ago
6 hour(s) ago