உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பட்ஜெட்டையொட்டி ‛அல்வா கிண்டும் நிகழ்வு: மத்திய அமைச்சர் பங்கேற்றார்

பட்ஜெட்டையொட்டி ‛அல்வா கிண்டும் நிகழ்வு: மத்திய அமைச்சர் பங்கேற்றார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: மத்திய பட்ஜெட் தாக்கலையொட்டி அல்வா கிண்டும் நிகழ்ச்சியை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராம் இன்று (ஜன. 24) துவக்கி வைத்தார்.பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடர், வரும் 31ல் துவங்குகிறது. அன்று லோக்சபா மற்றும் ராஜ்யசபா கூட்டுக் கூட்டத்தில், ஜனாதிபதி திரவுபதி முர்மு உரை நிகழ்த்த உள்ளார்.தொடர்ந்து 2025-26 ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை பிப்., 1ல், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவுள்ளார்.இதையடுத்து இன்று(24-ம் தேதி) ''அல்வா கிண்டும்'' நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கலந்து கொண்டு பட்ஜெட் தயாரிப்பு பணியில் ஈடுபட்டு வரும் அதிகாரிகள் அனைவருக்கும் அல்வா விநியோகித்தார்.இதில் அரசு செயலாளர்கள், உயரதிகாரிகள பட்ஜெட் தயாரித்தல் மற்றும் தொகுத்தல் பணிகளில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள் மற்றும் பணியாளர்களும் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

Barakat Ali
ஜன 25, 2025 09:02

பட்ஜெட் போடுவது அதிகாரிகள் ...... திட்டங்களைத் தீட்டுவதும் அதிகாரிகள் .... மத்திய மாநில அமைச்சர்கள் தற்குறிகள் ....


D Natarajan
ஜன 25, 2025 08:41

மக்களே ஹல்வா தயாராகி விட்டது. ஒண்ணாம் தேதி எல்லோருக்கும் கிடைக்கும்


Sampath Kumar
ஜன 25, 2025 08:22

காலா கொடுமைடா சாமி நிமி வந்த நாளில் இருந்து அல்லவா தான் மக்களுக்கு கொடுக்குது இதில் அல்லவா கிட்டும் நிகழ்ச்சியும் அது ஒரு செய்தி என்று போட்டு மகிழும் மட்டரகமான எண்ணம் கொண்ட அரசு


veera
ஜன 25, 2025 08:17

1950 ஆண்டு நேரு ஆட்சியில் முதல் ஹல்வா கிண்ட பட்டது...கண்ணுக்கு தெரியும் ..இப்போது இரும்பை கண்டுபிடித்து திமுக புது ஹல்வா கிண்டியுள்ளது...


Rajarajan
ஜன 25, 2025 08:16

என்ன அப்படி பெரிய சிதம்பர ரகசியம் இருக்கு பட்ஜெட்ல. நிச்சய செலவினங்களான அரசு ஊழியரின் சம்பளம் / சலுகை / ஊதிய உயர்வு / போனஸ் / வெட்டி பதவியுர்வு / ஓய்வூதியம் போன்றவற்றிக்கு தேவையான அதிகபட்ச செலவை நிச்சய வரவு வெச்சிப்பாங்க. கடைசியா மிஞ்சற தொகையை, போனா போகுதுனு, அங்க அங்க பிச்சி பிச்சி வளர்ச்சி திட்டங்களுக்கு கொடுப்பாங்க. அதுக்குள்ள திட்ட செலவு உயர்ந்து, திட்டங்கள் அப்படி அப்படியே நிக்கும். ஆங், ஒன்னு மறந்துட்டேனே. இதுக்கிடையில, அரசு ஊழியருக்கு, வருடத்திற்கு இரண்டு முறை பஞ்சபடி சலுகை கொடுக்கணும். அதுக்கு தான் டோல்கேட் வரி இருக்கே. அது கைகொடுக்கும். இதுதான் மத்திய / மாநில பட்ஜெட். வழக்கம்போல , பற்றாக்குறை இருக்கும். அதுக்கு உலகவங்கில கடன்வாங்கி, எல்லோருடைய தலையிலும் சுமையை போட்ருவாங்க. இதுக்கு இடையில, இலவசத்துக்கு பட்ஜெட் செலவு வேற தனியா ஓடும். இதை தான் விலாவாரியா, பட்ஜெட் விளக்க உரைனு, பிரிச்சி பிரிச்சி செலவினங்களை சொல்வாங்க. கேக்கறவங்களுக்கு ஒன்னும் புரியாம தலை சுத்தும். இரத்தின சுருக்கமா பட்ஜெட் வரவு எவ்வளவு, செலவு எவ்வளவு, பற்றாக்குறை எவ்வளவு, எப்படி ஈடு கட்டுவர், பயனாளி யார், சுமையை சுமப்பாருனு மட்டும் சொல்லவே மாட்டாங்க. கடைசிவரைக்கும், பாம்புக்கும், கீரிக்கும், சண்டை விடவே மாட்டாங்க. அரசு ஊழியருக்கு கொண்டாட்டம். தனியார் ஊழியருக்கு திண்டாட்டம். அரசு ஊழியருக்கு பிசுக்கோத்து, தனியார் ஊழியருக்கு பிம்பிலிக்கா பிளாப்பி.


sridhar
ஜன 25, 2025 08:13

வங்கி ஊழியர்கள் பென்ஷனில் எந்த முன்னேற்றமும் இல்லை - நாங்களும் பப்ளிக் செக்டர் தான் , ஆனால் மத்திய அரசு ஊழியர்களுக்கு அள்ளி கொடுத்து இருக்கிறார்கள் .


sridhar
ஜன 25, 2025 08:09

பட்ஜெட்டே எங்களுக்கு அல்வா தரும் நிகழ்ச்சி தானே , தனியாக எதற்கு மற்றொரு அல்வா .


அப்பாவி
ஜன 25, 2025 07:33

கூடவே கொஞ்சம் பாப்கார்னையும் போட்டு கிண்டுங்க. நிறைய காணும்.


venugopal s
ஜன 25, 2025 06:49

இது ஒரு தேவையற்ற, ஒழிக்கப் பட வேண்டிய, அர்த்தமற்ற சம்பிரதாயம்!


veera
ஜன 25, 2025 08:10

உனக்காக எல்லாம் மாத்த முடியாது....பொங்கல் பை வாங்கிட்டு ஒடி போ


Mani . V
ஜன 25, 2025 05:51

இதைக் கண்டுபிடித்தவன் மட்டும் என் கையில் கிடைத்தால்........


சமீபத்திய செய்தி