உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பெங்களூரில் லண்டன் பல்கலை ஏழை மாணவர்களுக்கு இடம்

பெங்களூரில் லண்டன் பல்கலை ஏழை மாணவர்களுக்கு இடம்

பெங்களூரு: கர்நாடகாவின் பெங் களூரில் திறக்கப்பட உள்ள லண்டன் பல்கலை கல்லுாரியில், ஏழை மாணவர்கள் படி ப்பதற்கு இடஒதுக்கீடு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக, கர்நாடக உயர்கல்வித் துறை அமைச்சர் எம்.சி.சுதாகர் தெரிவித்தார். ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள லான்காஸ்டர் பல்கலையின் கீழ் இயங்கும் கல்லுாரியை, பெங்களூரில் திறக்க கர்நாடக மாநில காங்., அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த கல்லுாரியில் மாணவர் சேர்க்கை, அடுத்த ஆண்டு ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் துவங்கும். இது குறித்து, உயர்கல்வித் துறை அமைச்சர் எம்.சி.சுதாகர் கூறியதாவது: கர்நாடகாவில் உள்ள மாணவர்கள் வெளிநாடுகளில் சென்று படிக்க, அதிகம் செலவு செய்ய வேண்டி இருக்கும். எனவே, பெங்களூரில் துவங்க உள்ள உலகத்தரம் வாய்ந்த லண்டன் பல்கலையை சேர்ந்த கல்லுாரியில் ஏழை மாணவர்கள் படிப்பதற்காக இடஒதுக்கீடு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு, அரசின் சார்பில் உதவித்தொகையும் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை