உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உ.பி., கலவரம்: சமாஜ்வாதி எம்.பி., மீது வழக்கு

உ.பி., கலவரம்: சமாஜ்வாதி எம்.பி., மீது வழக்கு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சம்பல்: உத்தர பிரதேசத்தின் சம்பலில், மசூதியில் ஆய்வு மேற்கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த வன்முறையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை, நான்காக உயர்ந்தது. இதற்கிடையே, அங்கு தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டு, வெளியாட்கள் நுழையவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி அமைந்துள்ளது. இங்குள்ள சம்பலில் உள்ள ஷாஹி ஜமா மசூதி குறித்து வழக்கு தொடரப்பட்டது. ஏற்கனவே இருந்த ஹிந்து கோவிலை இடித்து, அந்த இடத்தில் மசூதி கட்டப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த மாவட்ட நீதிமன்றம், இது தொடர்பாக ஆய்வு செய்ய உத்தரவிட்டது.இதன்படி, வழக்கறிஞர்கள், தொல்லியல் துறையினர் உள்ளிட்டோர் அடங்கிய குழு, சமீபத்தில் ஆய்வு செய்தது. இதைத் தொடர்ந்து, மீண்டும் ஆய்வு செய்ய குழுவினர் நேற்று முன்தினம் சென்றனர்.அதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிலர் கோஷமிட்டனர். ஆய்வு மேற்கொண்டோர் மீது, கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்; வாகனங்களுக்கு தீ வைத்தனர். இதையடுத்து, போலீசார், கண்ணீர் புகைகுண்டுகள் வீசியும், தடியடி நடத்தியும், அவர்களை கலைந்து போகச் செய்தனர்.இந்த வன்முறையில், மூன்று பேர் உயிரிழந்தனர். போலீசார் உட்பட, 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒருவர் நேற்று உயிரிழந்தார். இதையடுத்து பலி எண்ணிக்கை, நான்காக உயர்ந்துள்ளது.இதற்கிடையே, சம்பல் பகுதியில், நான்கு பேருக்கு மேல் கூடுவதற்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பிரச்னை தீவிரமாவதை தடுப்பதற்காக, வெளியாட்கள் நுழைவதற்கும் அனுமதி மறுத்து உத்தரவிடப்பட்டுள்ளது.சமூக அமைப்புகள், அரசியல் கட்சிகள், மக்கள் பிரதிநிதிகள் என, வெளியாட்கள் யாரும் வர வேண்டாம் என, மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது.சம்பல் தொகுதியைச் சேர்ந்த சமாஜ்வாதி எம்.பி., ஜியா வுர் ரஹ்மான் பர்க் உட்பட 400 பேர் மீது, கலவரத்தை துாண்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது; 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இணைய சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நிலைமை கட்டுக்குள் வந்தபோதும், பதற்றம் நிலவுகிறது.மக்களின் கருத்துக்களை கேட்காமல், பா.ஜ., தன் அதிகார பலத்தைப் பயன்படுத்தியுள்ளது. ஹிந்து - முஸ்லிம் இடையே பிரிவினையை ஏற்படுத்தும் இந்த முயற்சி நல்லதல்ல. இந்த விஷயத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட்டு, நீதி கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும்.ராகுல்,லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர், காங்.,

நீதி வேண்டும்!

'திட்டமிட்ட சதி!'

இந்த பிரச்னை லோக்சபாவிலும் நேற்று எதிரொலித்தது. சபை நடவடிக்கைகள் துவங்கியதும், உ.பி., வன்முறை தொடர்பாக விவாதிக்க வேண்டும் என, எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் பலர் வலியுறுத்தினர். திட்டமிட்டு சதி நடந்துள்ளதாக, சம்பல் எம்.பி.,யான சமாஜ்வாதியின் ஜியா வுர் ரஹ்மான் பர்க் கூறினார். அதுபோலவே, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் எம்.பி.,க்களும், முஸ்லிம்களுக்கு எதிராக மத ரீதியில் திட்டமிட்டு இந்த வன்முறை சம்பவம் நடத்தப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டினர்.“இதில் திட்டமிட்ட சதி நடந்துள்ளது. பா.ஜ.,வின் வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியாமல், சமீபத்தில் இடைத்தேர்தல் நடந்த ஒன்பது இடங்களில், ஏழு தொகுதிகளில் பா.ஜ., வென்றதை ஏற்க முடியாமல், எதிர்க்கட்சிகள் இந்த வன்முறையை நிகழ்த்தியுள்ளன,” என, பா.ஜ.,வின் சாக் ஷி மகராஜ் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

M Ramachandran
நவ 26, 2024 09:52

இந்துக்களுக்கு எதிராக கோஷமிடும் இந்த ராகுலுக்கு ஓட்டு போடும் ஹிந்துக்கள் அறிவீலிகள்


பேசும் தமிழன்
நவ 26, 2024 09:06

ஏண் நீதிமன்ற உத்தரவின் பேரில் ஆய்வு நடத்த அரசு அதிகாரிகள் சென்றால்... அவர்களை பணி செய்ய விடாமல்... அவர்கள் மீது தாக்குதல் நடத்துவதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்... இதனை தான் எதிர்கட்சி ஆட்கள் ஆதரிக்கிறார்களா ???


SUBBU,
நவ 26, 2024 09:00

இந்த உலகத்தில் எத்தனையோ வியக்கத்தக்க பிரமாண்டமான தேவாலயங்களை கிறிஸ்தவர்கள் கட்டியிருக்ககிறார்கள். அதே போல இஸ்லாமியர்கள் மிகப்பெரிய மசூதிகளை வடிவமைத்து உள்ளார்கள். அவ்வளவு ஏன் இந்தியாவை ஆண்ட முகலாய மன்னர்கள் கூட ஆக்ராவில் உலகப் புகழ்பெற்ற தாஜ்மஹாலை கட்டியிருக்கிறார்கள். ஆனால் இவற்றையெல்லாம் மிஞ்சும் வகையில் நம் முன்னோர்களான இந்துக்கள் மட்டும்தான் அந்தக் காலத்திலேயே மசூதிகளுக்கு கீழே கோவில் கட்டும் கட்டிடக் கலையை அறிந்து வைத்திருந்திருக்கிறார்கள் என்பதை நினைத்து இந்தியர்களான நாம் அனைவரும் பெருமைப்பட வேண்டும்.


VENKATASUBRAMANIAN
நவ 26, 2024 07:56

ஏண் ஆய்வு செய்ய வந்தவர்களை தாக்கினால் கொஞ்சுவார்களா. அருணன் என்ற வீணாய் போன கம்யூனிஸ்ட் ஊளறுகிறான். இதற்கு வன்னியரசு என்று வீணாய் போனவன் ஒத்து. இதையே இந்துக்கள் செய்திருந்தால் மதவாதம் என்று கத்தும் ஜென்மங்கள். யார் செய்தாலும் தவறுதான். கம்யூனிஸ்டுகள் காணாமல் போய் ரொம்ப நாளாயிற்று. தமிழ்நாடு கேரளாவில் மட்டுமே ஒட்டி கொண்டு உள்ளனர். மெத்த படித்த கேரளா மக்கள் உணரவேண்டும்


Kalyanaraman
நவ 26, 2024 07:40

"மடியில் கனம் இருந்தால்தான் வழியில் பயமிருக்கும்". "எங்க அப்பன் குதிருக்குள் இல்லை" என்பது போல் இந்து கோயிலை இடித்து கட்டப்பட்ட மசூதி என்பது இந்த வன்முறை போராட்டத்தின் மூலம் தெரிகிறது.


Indian
நவ 26, 2024 07:12

நீதி மன்றம் நிதிமன்றம் ஆகிவிடக்கூடாது.


Tetra
நவ 26, 2024 07:04

வழக்கு போட்டு என்ன பிரயோஜனம். உள்ள தள்ளி கொலை வழக்கில் தண்டிக்க வேண்டாமா?


Kasimani Baskaran
நவ 26, 2024 05:57

ஆக்கிரமித்து கட்டி இருக்கிறார்கள் என்று தெரிந்தும் கூட ஒன்றும் செய்ய முடியாத நிலை இருந்து வந்தது. இன்றைய நிலை வேறு. ஆகவே இந்த மாற்றம் காங்கிரஸ் கட்சிக்கோ அதன் கிளை நிறுவனங்களுக்கோ பிடிக்கவில்லை.


sundar
நவ 26, 2024 04:48

நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ஏற்காமல் வன்முறையில் இறங்கினால் இது தான் கதி.


A Viswanathan
நவ 26, 2024 11:10

ராகுல் எப்போது இந்துக்களின் பக்கம் நின்றிருக்கிறார். நீதி மன்றத்தின் வழிகாட்டின் பேரில் தான் ஆய்வுக்கு சென்றிருக்கிறார்கள் என்பது கூட இவருக்கு தெரியவில்லை.பாரதமக்கள் செய்த பாவம் இப்படி தத்து பேர்வழியை எதிர்கட்சி தலைவராக்கியது


A Viswanathan
நவ 26, 2024 11:10

தத்து பேர்வழியை எதிர்கட்சி தலைவராக்கியது


புதிய வீடியோ