உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / போலி என்கவுன்டர்: முதலிடத்தில் உ.பி.,

போலி என்கவுன்டர்: முதலிடத்தில் உ.பி.,

புதுடில்லி : நாட்டில் போலி என்கவுன்டர்கள் நடைபெறும் மாநிலங்களில் உத்திர பி‌ரதேசம் முதலிடத்தில் உள்ளது. இம்மாநிலத்தில் கடந்த 3 ஆண்டுகளில் போலி என்கவுன்டர் மூலம் போலீசாரால் சுமார் 120 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். நடப்பு ஆண்டின் முதல் 6 மாதங்களில் போலி என்கவுன்டர் மூலம் 6 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக பலியானவர்களின் குடும்பத்தினர் தேசிய மனிதஉரிமையகள் ஆணையத்திடம் முறையிட்டுள்ளனர். 2010-11ம் ஆண்டில் உத்திர பிரதேசத்தில் 40 பேர் போலீஸ் என்கவுன்டர் மூலம் கொலை செய்யப்பட்டுள்ளதாக மனிதஉரிமைகள் கழகத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதே போன்று 2008-09 மற்றும் 2009-2010 ஆண்டுகளில் 71 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 2008-09ம் ஆண்டு முதல் நடப்பு ஆண்டின் ஜூன் மாதம் வரை போலி என்கவுன்டர் குறித்து 369 வழக்குகள் மனிதஉரிமைகள் கழகத்திடம் உள்ளது. இவற்றில் 98 வழக்குகள் மட்டுமே தீர்க்கப்பட்டுள்ளன. இவற்றில் 90 வழக்குகள் போலீசாரின் அனுமானத்தின் பேரிலேயே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. உத்திர பிரதேசத்தை தொடர்ந்து போலி என்கவுன்டர்கள் அதிகம் நடைபெறும் மாநிலம் மணிப்பூர் ஆகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்