உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / யு.பி.ஐ., சேவை பாதிப்பு: கூகுள்பே, போன்பேயில் பணபரிமாற்ற சிக்கல்: பயனர்கள் அவதி

யு.பி.ஐ., சேவை பாதிப்பு: கூகுள்பே, போன்பேயில் பணபரிமாற்ற சிக்கல்: பயனர்கள் அவதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ஆன்லைன் மூலம் பணப் பரிமாற்றம் செய்யும் யு.பி.ஐ., சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் உள்ள பயனர்கள் சிரமம் அடைந்தனர்.இந்தியர்களின் அன்றாட வாழ்க்கையில் தினமும் ஆன்லைன் பரிவர்த்தனைகள் முக்கிய பங்காக மாறிவிட்டது. டீக்கடை முதல் ஷாப்பிங் மால் வரை டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவதில் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்காக ஜிபே, போன்பே, பேடிஎம் உள்ளிட்ட செயலிகளை பயன்படுத்தி வருகின்றன.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=2kqn7xm3&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், இன்று ( ஏப்ரல் 12) காலை 11.30 மணி முதல் யு.பி.ஐ., (டிஜிட்டல் முறையிலான பணப்பரிமாற்றம்) சேவையை இந்த செயலிகளில் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.இந்தியா முழுவதும் உள்ள டிஜிட்டல் பயனாளர்கள் பணத்தை பரிமாற்றம் செய்ய முடியாமல் தவித்தனர். யு.பி.ஐ., பணப் பரிமாற்றம் செலுத்த முடியவில்லை என்று புகார் தெரிவித்துள்ளனர். நண்பகல் வரை 1,168 புகார்கள் வந்துள்ளன. அவற்றில், கூகுள் பே பயனர்கள் 96 சிக்கல்களைப் புகாரளித்தனர். யு.பி.ஐ., செயல்பாடுகளை மேற்பார்வையிடும் இந்திய தேசிய கட்டணக் கழகம் (NPCI) தற்போது இடைவிடாத தொழில்நுட்ப சிக்கல்களை சந்தித்து வருவதாகவும், இது யு.பி.ஐ., பரிவர்த்தனைகளில் ஓரளவு சரிவை ஏற்படுத்துவதாகவும் ஒப்புக்கொண்டது. சிக்கலைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பயனர்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம் என என்.பி.சி.ஐ., தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Ramesh
ஏப் 12, 2025 15:24

இந்திய அரசின் செயலியான பீம் செயலியில் எந்த வித இடர்பாடின்றி பணப்பரிமாற்றம் செய்ததில் எந்தவித தடங்கலும் வரவில்லை


M. PALANIAPPAN, KERALA
ஏப் 12, 2025 15:14

மக்கள் அதிகம் பயன்படுத்துவதால் பணபரிமாற்ற சிக்கல் நிச்சயமாக குழப்பம் ஏற்படுத்தும்


Columbus
ஏப் 12, 2025 14:47

Sabotage or hacking.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை