உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கருக்கு யுபிஎஸ்சி நோட்டீஸ்: தேர்வு எழுத தடை விதிக்க வாய்ப்பு?

ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கருக்கு யுபிஎஸ்சி நோட்டீஸ்: தேர்வு எழுத தடை விதிக்க வாய்ப்பு?

புதுடில்லி: பார்வை மற்றும் மன ரீதியிலான பிரச்னை உள்ளிட்டவற்றை மறைத்தது மற்றும் பல சர்ச்சைகளில் சிக்கி உள்ள ஐ.ஏ.எஸ்., அதிகாரி பூஜா கேத்கரிடம் விளக்கம் கேட்டு யுபிஎஸ்சி நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இதற்கு, அவர் அளிக்கும் விளக்கத்தை பொறுத்து எதிர்காலத்தில் யுபிஎஸ்சி தேர்வு எழுத தடை விதிக்கப்படலாம்.மஹாராஷ்டிராவின் உதவி கலெக்டராக பணியாற்றிய பயிற்சி ஐ.ஏ.எஸ்., அதிகாரி பூஜா கேத்கர் என்பவர், அரசால் வழங்கப்படாத வசதிகளை அவர் அத்துமீறி பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. தன் சொகுசு காரில் அரசு பெயர் பலகை மற்றும் சிவப்பு - நீல சுழல் விளக்கு பயன்படுத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியது. விதிமீறலில் ஈடுபட்டதை அடுத்து பூஜா, வாஷிம் மாவட்டத்துக்கு மாற்றப்பட்டார். தற்போது காத்திருப்போர் பட்டியலில் உள்ள அவர், ஐ.ஏ.எஸ்., பணியில் சேர்ந்தபோது, உடல் ரீதியான குறைபாடு மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவுக்கான சான்றிதழ்களை முறைகேடாக சமர்ப்பித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து விசாரிக்க மத்திய அரசு ஒரு நபர் கமிஷனை சமீபத்தில் அமைத்தது. அவரது பயிற்சியையும் நிறுத்தி வைக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.இந்நிலையில், பொய் சொல்லியும், தனது அடையாளத்தை மறைத்து தேர்வு எழுதியதற்காக பூஜா கேத்கருக்கு விளக்கம் கேட்டு யுபிஎஸ்சி நோட்டீஸ் அனுப்பி உள்ளது.இது குறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பில், வரம்பு மீறி மோசடி செய்ய முயற்சித்த பூஜா கேத்கருக்கு எதிராக யுபிஎஸ்சி நடவடிக்கைகளை துவங்கி உள்ளது. கிரிமினல் வழக்குப்பதிவு செய்தல், வெற்றி பெற்றதை ரத்து செய்வது குறித்து பதிலளிக்கும்படி உத்தரவிடப்பட்டு உள்ளது. இதற்கு அவர் அளிக்கும் பதிலை வைத்து, எதிர்காலத்தில் யுபிஎஸ்சி தேர்வு எழுத தடை விதிப்பது உள்ளிட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

Raja Sudha
ஜூலை 20, 2024 21:30

இப்போதெல்லாம் தேர்வு என்றாலே முறைகேடு என்ற அளவிற்கு ஆகிவிட்டது இதே போல் தேர்வு முறைகேடாகவே நீடித்தால் ஏழைகளுக்கு கல்வியும் வேலை வாய்ப்பு எட்டாக்கனியாகிவிடும்


Lion Drsekar
ஜூலை 20, 2024 13:40

ஒவ்வொரு துறையிலும் அனுபவமும் தகுதியும் திறமையும் நேர்மையாகவும் இருப்பவர்களை பாராட்டி அவர்களது சேவையை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு தலைமை பதவியைக் கொடுத்தால் சிறந்த முறையில் மக்களுக்கு சேவை செய்வார்கள், நாம் சொல்லி அரசாங்கம் கேட்டுவிட்டாலும் . வந்தே மாதரம்


Krishnan Santhanaraj
ஜூலை 20, 2024 11:59

UPSC chairman himself interviewed her, minutes getting published, pl. refer.


venugopal s
ஜூலை 20, 2024 07:21

இத்தனை முறைகேடுகள் செய்து தேர்ந்தெடுக்கப்பட்டு இதுவரை பயிற்சி ஐஏஎஸ் ஆக பணியாற்றினார் லட்சணம் மத்திய பாஜக ஆட்சியில் எவ்வளவு கேவலமாக உள்ளது என்று புரிந்து கொள்ள முடிகிறது!


Balaji
ஜூலை 20, 2024 02:54

நீட் தேர்வில், சேலம் அருகே, ஒரு மகளிர் அரசு பள்ளியில் 11 பேர் நீட் எழுதி மருத்துவப்படிப்பில் சேர்ந்த செய்தி, சில வருடங்களுக்கு முன் செய்தியாக தினமலரில் வெளியிடப் பட்டது. தமிழகத்தில் ஐஏஎஸ் படிப்பில் தேர்வு பெரும் எழை மாணவர்கள் மிகவும் குறைவு. ஆனால், இந்த தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக் கோரி யாரும் போராடவில்லை. தமிழகத்தில், அரசு பள்ளிகளின் கல்வித்தரம் குறைந்துள்ளது, என்ற உண்மை கசப்பானது என்றாலும், ஒப்புக்கொண்டு, இதை சரிசெய்ய நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, மாணவர்கள் பயனடைவர்.


Azar Mufeen
ஜூலை 19, 2024 23:46

பாக்க நடிகை மாதிரி இருக்கியே தாயி...அப்படிக்கா கூத்து குஜராத் பக்கம் போனினா தேசப்பற்று கட்சி காரங்க நான், நீ னு போட்டிப்போட்டு கவனிப்பானுங்க


sankaranarayanan
ஜூலை 19, 2024 22:38

நீட் தேர்வில் மோசடி ஏழைமாணவர்கள் எளிதில் தேர்ச்சி பெரு முடியவில்லை என்கிறார்கள் இப்போது ஐஏஎஸ் பரிச்சையிலும் மோசடி நடந்துள்ளது அதிலும் ஏழைமாணவர்கள் தேர்ச்சிபெற முடியவில்லை ஆதாலால் அந்த ஐஏஎஸ் பரிச்சையும் அகற்றிவிடுவார்களா என்னடா இது பொய்க்கு இந்தியாவில் தேர்வு என்று ஒரு போட்டியே இல்லாமல் போயிடும்


தமிழ்வேள்
ஜூலை 19, 2024 20:17

பார்க்க நடிகை கணக்கா இருக்கியே தாயி....இப்படிக்கா டுமீல் நாடு பக்கம் வந்துட்டா ஆதரவுக்கரம் நீண்ட, நீ, நான் -ன்னு திராவிட செம்மல்கள் ரெடியா கீறாங்கோ.... அப்புறம் எதுக்கு தாயி கவலை?


chandrasekar
ஜூலை 19, 2024 18:04

இங்க மட்டும் என்ன வாழுதாம்... டி.என்.பி.எஸ்.சி., விடைத்தாளை ஓடும் வேனில் மாற்றி ஒரே மையத்தில் பலர் தேர்வான கதை இங்கும் சில ஆண்டுகளுக்கு முன் நடந்துள்ளது. எனவே முறைகேடு எல்லா இடத்திலும் தான் உள்ளது.... இதில் இந்திக்காரன்... தமிழன் வித்தியாசமெல்லாம் கிடையாது....


Sankaran Natarajan
ஜூலை 22, 2024 14:37

சென்ற ஆட்சியில் நடந்த டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு விசாரணை இன்னும் நிலுவையில் உள்ளது.


Swaminathan L
ஜூலை 19, 2024 17:59

ஐஏஎஸ் விஷயத்தையும் விட்டு வைக்கவில்லையா மோசடி? சம்பந்தப்பட்ட வர் தானாகவே பிரச்சினைகள் செய்து, சிக்கியிருக்கா விட்டால் அவர் பயிற்சி முடித்து கலெக்டராகவும் ஆகி மக்களுக்கு சேவையைத் தொடர்ந்திருப்பார். இப்போது, ஒவ்வொரு மோசடியாகக் கண்டுபிடிக்கப்பட்டு வெளிவருகிறது. இதில், ஆள், பெயர், தாய், தந்தை பெயர், சாதி, இட ஒதுக்கீடு என்று பலவிதங்களிலும் பொய், பித்தலாட்டம் என்று வேறு தகவல்.


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை