உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அமெரிக்கா குற்றச்சாட்டு எதிரொலி: அதானி நிறுவன குழும பங்குகள் கடும் சரிவு

அமெரிக்கா குற்றச்சாட்டு எதிரொலி: அதானி நிறுவன குழும பங்குகள் கடும் சரிவு

புதுடில்லி: அதானி மீது நியூயார்க் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டை தொடர்ந்து, அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் விலை 10 சதவீதம் முதல் 28 சதவீதம் வரை சரிந்துள்ளது.தொழிலதிபர் அதானி சூரிய ஓளி மின்சாரத்தை பெறுவதற்கு 25 கோடி டாலர்கள் லஞ்சமாக இந்திய அதிகாரிகளுக்கு கொடுத்து பெற்றுள்ளார். அதில் அமெரிக்கர்களை முதலீடு செய்ய வைத்து மிகப்பெரிய மோசடியை நிகழ்த்தியுள்ளார்' என நியூயார்க் பெடரல் நீதிமன்றத்தில் அமெரிக்கா வழக்கு ஒன்று தொடர்ந்துள்ளது. இந்நிலையில் இன்று (நவ.,21) அதானி குழு நிறுவன பங்குகள் விலை சரிந்துள்ளன.

அதன் விபரம் பின்வருமாறு:

* அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் விலை 10 சதவீதம் முதல் 28 சதவீதம் வரை சரிந்துள்ளது.* அதானி என்டர்பிரைசஸ் லிமிடெட் நிறுவன பங்கு விலை 10 சதவீதம் சரிந்துள்ளது.* அதானி போர்ட் பங்கு விலை 10 சதவீதத்துக்கும் மேல் சரிந்துள்ளது.* அதானி பவர் நிறுவன பங்கு விலை 13 சதவீதமும், அதானி எனர்ஜி நிறுவன பங்கு விலை 20 சதவீதமும் சரிந்துள்ளன.* அதானி டோட்டல் கேஸ் நிறுவனத்தின் பங்கு விலை 13 சதவீதமும், அதானி வில்மர் நிறுவனத்தின் பங்கு விலை 10 சதவீதமும் சரிந்துள்ளன.

டாலர் பத்திர விலை சரிவு

அதானி நிறுவனங்களின் டாலர் அடிப்படையிலான கடன் பத்திர விலைகள் கடுமையாக சரிந்துள்ளன. 2027ல் முதிர்ச்சி அடையும், அதானி துறைமுகம் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலம் வழங்கிய கடன் பத்திர விலை 5 சென்ட் விட அதிகமாக சரிந்துள்ளது. அதேபோல், பிப்ரவரி 2030ல் முதிர்ச்சி அடையும் அதானி எலக்ட்ரிசிட்டி மும்பையின் பத்திர விலையும் 8 சென்ட் சரிந்துள்ளது. அதானி டிரான்ஸ்மிஷன் பத்திர விலையும் 5 சென்ட் சரிவை சந்தித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

தாமரை மலர்கிறது
நவ 21, 2024 20:06

அதானி உலக முதல் பணக்காரர் ஆகிவிடுவார் என்ற வயித்தெரிச்சலில் அமெரிக்கா புலம்புகிறது. அதானிக்கு அதிக திறமை உள்ளது. அவர் சம்பாரிக்கிறார். அதானி இந்தியாவை உலக வல்லரசாக்கிவிடுவார் என்ற பயத்தில் பொய் குற்றச்சாட்டுகளை வீசுகிறது.


வைகுண்டேஸ்வரன்
நவ 21, 2024 17:29

அதானி பாஜக உறுப்பினரா? இல்லை தானே? அப்புறம் ஏன் பாஜக கொத்தடிமைகள் இந்த அலறு அலறுகிறீர்கள்?? அல்லது அவரோட கம்பெனி ஷேர் வெச்சிருக்கீங்களோ?


Sundaram Muthiah
நவ 21, 2024 15:09

எவ்வளவு அடிச்சாலும் தாங்கும் இந்தியா.


Ramesh Sargam
நவ 21, 2024 14:35

போனமுறை ராகுல் அமெரிக்கா சென்றபோதே இதை எதிர்பார்த்தேன். அங்கு அவர் போவதே இந்தியாவை பற்றி பொய் பிரச்சாரம் செய்யத்தான். அதன் விளைவுதான் இன்று இந்த அமெரிக்கா குற்றச்சாட்டு எதிரொலி.


Sivakumar
நவ 21, 2024 20:47

2015 இல் ஒருவர் முதல்முறையாக அமெரிக்கா சென்றபோது இந்தியாவில் ஊழல் மயமாக இருந்தது-னு சொன்னப்போ உங்களுக்கு அது இந்தியாவிற்கு எதிரான துர்பிரச்சாரமாக தெரியாத விந்தை ஏனோ ?


Nandakumar Naidu.
நவ 21, 2024 13:31

இங்கிருக்கும் தேச விரோத காங்கிரஸ்காரர்களின் அமெரிக்க கொத்தடிமைகள் இந்தியாவின் வளர்ச்சியை பார்த்து பொறாமை கொண்டு இவ்வாறு பொய்வழக்குகளை போட்டு அதானியின் வளர்ச்சியை தடுக்க நினைக்கும் ஓநாய்களின் சூழ்ச்சி பலிக்காது.


Sundar R
நவ 21, 2024 12:57

லஞ்சம் வாங்கிய பணத்தை திமுக, பாஜக, காங்கிரஸ் ஆகியோர் அடானியிடம் திருப்பிக் கொடுத்தால் அடானி குழுமத்தின் பங்கு மீண்டும் பழைய நிலைக்கு உயரும். அமெரிக்க முதலீட்டாளர்களுக்கு நஷ்டமில்லை. நம் நாட்டின் பொதுமக்களுக்கு தான் நஷ்டம். நம் நாட்டின் பொதுமக்களுடைய பணத்தை கொள்ளையடித்து திமுக, பாஜக, காங்கிரஸ் மற்றும் சில இதர கட்சியினர் என்னென்ன விளையாட்டெல்லாம் விளையாடுகிறார்கள். இம்மாத இறுதியில் துவங்கவுள்ள பாராளுமன்ற கூட்டத்தொடரில் அடானியிடம் லஞ்சம் வாங்கிய திமுகவினர் எப்படி சவுண்டாக கத்தப்போகிறார்கள் பாருங்கள். தமிழகத்தில் சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் அடானி முதலீடு செய்துள்ளார். லஞ்சம் வாங்காமல் எந்த மாநிலத்திலாவது பெரிய திட்டங்கள் வந்ததுண்டா ?


Veeraputhiran Balasubramoniam
நவ 21, 2024 12:47

தமிழக மாடெலுக்கு தான் ஒரு மெஹா வாட் சூரிய சக்தி தயாரிக்க அனுமதி பெற மட்டுமே அரசியல் வாதிகளுக்கு கொடுக்க வேண்டிய லஞ்சம் மட்டுமே இருபத்திஐந்து லட்சம் ரூபாய் .... இது போக மின் வாரிய அதிகாரி, சுற்ரு சூழல் கிளியரன்ஸ் இத்யாதி ..இத்யாதி ... எடுபிடி என பெரிய லிஸ்ட் உள்ளதே அது தெரியாதா?


SUBBU,
நவ 21, 2024 12:40

அமெரிக்காவில் நடக்கும் இமாலய ஊழல்களைப் பற்றி அங்குள்ள ஊடகங்கள் எதுவுமே மூச்சே விடாது. ஆனால் மற்றவர்களை குறை கூறணும் என்றால் அவர்களுக்கு அல்வா சாப்பிடுவது போல வரிந்து கட்டிக் கொண்டு வருவார்கள். அமெரிக்க பென்டகன் மிகப் பெரிய ஊழலை செய்திருக்கிறது கொஞ்ச நஞ்சமல்ல 824 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்று அதை ஆய்வு செய்த 7 வது தணிக்கை துறை கூறியிருக்கிறது. அந்தப் பணம் அனைத்தும் எங்கே போனது யாருக்கு போனது என்பதை அவர்கள் கண்டுபிடிக்க முயலவில்லை நீறு பூத்த நெறுப்பாக புகைந்து கொண்டிருக்கிறது. அப்படி ஊழல் நிறைந்த அமெரிக்க deep state இந்தியாவின் மேல் ஊழல் குற்றச்சாட்டுகளை கூறி அமெரிக்கர்களை திசை திருப்புவதில் மும்முரமாக உள்ளது இப்படி அமெரிக்க மக்கள் செலுத்தும் வரி $824 பில்லியன் டாலர் பணத்தை ஊழல் பண்ணி கொள்ளையடித்தது யார் என்று NYT அல்லது WaPo அல்லது Financial Times போன்ற அமெரிக்க RSB மீடியாக்கள் இதைப் பற்றிய கேள்விகளை செய்தியாக போடாமல் இந்தியாவில் உள்ள அதானி குழுமத்தின் மேல் பொய்யான அவதூறுகளை கூறி அதை வெளிப் படுத்துவதில் பிஸியாக இருக்கிறார்கள் அதை இங்குள்ள தேச விரோத காங்கிரஸ் கட்சியினர் பெரிய விவாதப் பொருளாக்கி நம் நாட்டின் பங்குச் சந்தையை வீழ்ச்சியடைய வைத்துக் கொண்டுள்ளனர். நடந்த இந்த இரண்டு மாநில தேர்தல்களில் பயங்கர அடி வாங்கப் போகும் சோனியா காங்கிரஸ் அதன் பிறகு தானாக அடங்கி விடும் என்று எதிர்பார்க்கலாம்.


பாமரன்
நவ 21, 2024 14:06

சரிங்க சுப்புடு...


jagadeesh. b
நவ 21, 2024 12:30

ராகுல் இதை வைத்து 1மாதம் அரசியல் செய்யலாம்.


Sudha
நவ 21, 2024 12:20

ஆக ஊழல் பங்குகளில் முதலீடு செய்யும் கேடு கெட்ட அமெரிக்க முதலீட்டாளர்கள்


முக்கிய வீடியோ