உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிரதமர் மோடியை விமர்சித்து அமெரிக்க நடிகையிடம் வாங்கிக் கட்டிக் கொண்ட ராகுல்!

பிரதமர் மோடியை விமர்சித்து அமெரிக்க நடிகையிடம் வாங்கிக் கட்டிக் கொண்ட ராகுல்!

புதுடில்லி; டிரம்பை பார்த்து பிரதமர் மோடி பயப்படுகிறார் என்று நீங்கள் சொல்வது மிகவும் தவறு என்று ராகுலை அமெரிக்க பிரபல நடிகையும், பாடகருமான மேரி மில்பென் கண்டித்துள்ளார். அண்மையில் வெள்ளை மாளிகையில் நிருபர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா விரைவில் நிறுத்தும் என்று பேசி இருந்தார். இதை விமர்சித்து லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார்.அந்த பதிவில் பிரதமர் மோடி டிரம்பை பார்த்து பயப்படுகிறார் என்று கூறி அந்த 5 விஷயங்கள் என்ன என்றும் குறிப்பிட்டு இருந்தார். இந் நிலையில் ராகுலின் இந்த கருத்துக்கு அமெரிக்க பிரபல நடிகையும், பாடகருமான மேரி மில்பென் கண்டனம் தெரிவித்துள்ளார்.அவர் தமது எக்ஸ் வலைதள பதிவில் கூறி உள்ளதாவது;நீங்கள் சொல்வது தவறு ராகுல். டிரம்பை கண்டு அவர்(பிரதமர் மோடியை குறிப்பிடுகிறார்) பயப்படவில்லை. அமெரிக்காவின் விளையாட்டையும், ராஜதந்திரத்தையும் அவர் புரிந்து கொண்டுள்ளார். அதிபர் டிரம்ப் எப்போதும் அமெரிக்க நாட்டின் நலன்களை முன்னிலைப்படுத்துவது போல், பிரதமர் மோடியும் இந்தியாவுக்கு சிறந்ததைத் தான் செய்வார். நாட்டின் தலைவர்கள் என்பவர்கள் அப்படித்தான் செய்வார்கள். நான் அதை பாராட்டுகிறேன். அவர்கள் தங்களின் நாட்டுக்கு எது சிறந்ததோ அதை செய்கிறார்கள். அதை நான் பாராட்டுகிறன். இந்த தலைமையை நீங்கள் (ராகுல்) புரிந்து கொள்ள வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. ஏன் எனில், இந்திய பிரதமராகும் வகையிலான புத்திசாலித்தனத்தை பெற்றிருக்கவில்லை. எனவே நீங்கள் மீண்டும் இந்தியாவை வெறுக்கிறேன் என்ற உங்களின் பிரசாரத்தை தொடருங்கள். அங்கு ஒரேயொரு பார்வையாளர் மட்டுமே உள்ளார், அது நீங்கள் தான்.இவ்வாறு தமது பதிவில் அமெரிக்க பாடகர் மேரி மில்பேன் கூறி இருக்கிறார்.மேரி மில்பென் அமெரிக்காவின் பிரபல நடிகை மற்றும் பாடகரும் கூட. ஓம் ஜெய் ஜெகதீஷ் ஹரே என்ற பாடலை பாடியதன் மூலம் அமெரிக்காவில் வசிக்கும் புலம்பெயர் இந்தியர்கள் மத்தியில் புகழ் பெற்றவர் ஆனார். பலமுறை இந்தியா, அமெரிக்கா உறவுக்கு மிகச்சிறந்த தலைவர் பிரதமர் மோடி என்று புகழாரம் சூட்டி இருக்கிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு பிரதமர் மோடி அமெரிக்கா சென்றிருந்த போது, மேடையில் மேரி மில்பென் இந்திய தேசிய கீதம் பாடி பிரதமர் மோடியின் ஆசிர்வாதம் பெற அவரது பாதம் தொட்டு வணங்கினார். இந்த வீடியோ காட்சிகள் அப்போதே இணையதளங்களில் பிரபலம் ஆகி, பெரும் வரவேற்பையும் பெற்றது, குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 60 )

R SRINIVASAN
அக் 18, 2025 11:42

மோடியை நீங்கள் புகழ வேண்டும் என்று இங்கு யாரும் எதிர்பார்க்கவில்லை. இந்திராகாந்தியின் ஆபரேஷன் ப்ளூ ஸ்டாரை 1984 காங்கிரசை சேர்ந்த சிதம்பரமே தவறு என்று அறிக்கை விட்டிருக்கிறார். இந்திராவின் எமெர்ஜென் சி கொடுமைகளை அனுபவித்தவர்கள்


Thravisham
அக் 18, 2025 06:37

பாங்காக் பல்கலையில் எப்போ பேசுவார்?


Rathna
அக் 18, 2025 15:46

பாங்காக் பல்கலையா அதன் பொருள் என்ன??


Kasimani Baskaran
அக் 18, 2025 06:11

தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் சென்று, அங்குள்ள பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடையே இந்திய அரசியல் பேசி ஒன்று சாதித்து விட முடியாது. எதிர்க்கட்சித்தலைவருக்கு அவ்வளவு ஒய்வு எடுக்க நேரமிருக்கிறது. இதையெல்லாம் பாராளுமன்றத்துக்குள் விடுவதே கிரிமினல் குற்றம்.


spr
அக் 18, 2025 04:14

"இந்த தலைமையை நீங்கள் ராகுல் புரிந்து கொள்ள வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. ஏன் எனில், இந்திய பிரதமராகும் வகையிலான புத்திசாலித்தனத்தை பெற்றிருக்கவில்லை." இதைவிட செவிட்டில் அடித்தாற்போல எவரும் சொல்ல முடியாது. சொன்னவரைப் பாராட்டுவோம். அவருக்குத் தெரியும் இந்தக் காலத்திலும், தான் ஆட்சிக்கு வரப்போவதில்லை அதனால் பொறுப்புடன் பேச வேண்டிய அவசியமில்லை என்று


Nanchilguru
அக் 18, 2025 05:15

மிக சரி, இங்கும் ஒருவர் இதை புரிந்து கொள்ள வேண்டும்


naranam
அக் 18, 2025 01:27

எவ்வளவு சொன்னாலும் மரமண்டையில் ஏறாது.. திருத்தவே முடியாது..


M Ramachandran
அக் 18, 2025 00:05

சொந்த பிறந்த நாட்டு துரோகி


M Ramachandran
அக் 18, 2025 00:05

சொந்த பிறந்த நாட்டு துரோகி


oviya vijay
அக் 17, 2025 23:50

தன்னிலை தாழாமையும் தாழ்ந்தபின் வாழாமையும் மானம் எனப்படும்.


மனிதன்
அக் 17, 2025 23:29

நடிகைதானே அப்படித்தான் பேசுவார்.. வெளிநாட்டுக்கு போகும்போது, போவதற்கு இரண்டுநாள் நாள் முன்பாகவே தன்னை வரவேற்க,புகழ, அழுது நடிக்க, மேளதாளத்துடன் ஆட்களை அனுப்பி வைப்பவருக்கு இதெல்லாம் ஒரு பெரிய விஷயமா??? உண்மைதான் அந்த நடிப்பு அரசியலெல்லாம் ராகுலுக்கு தெரியாதுதான் ஒத்துக்கொள்கிறேன்... ஆனால் ஒரே ஒரு வேண்டுகோள், வெளிநாட்டிற்கு மேளதாளத்துடன் ஆட்களை அனுப்பி வைக்கும்போது, ஒரே கான்டராக்டரிடம் ஒப்பந்தம் போடாதீர்.. மேலும் நிறுவனத்தின் பெயரும், போன் நம்பரும் இருக்கும் மேளத்தை வீடியோவில் காண்பிக்கவேண்டாம் என வீடியோகிராபரிடம் முதலிலேயே சொல்லிவிடுங்கள்... ஏனென்றால் உங்கள் தில்லாலங்கடி வேலைகளெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக வெளியில் தெரியத்தொடங்கிவிட்டது...


rama adhavan
அக் 18, 2025 05:36

பாவம் அழுகிறார்.


K V Ramadoss
அக் 18, 2025 06:29

இவர் என்ன சொல்கிறார் ? புரியவில்லையே கமலின் மறு உருவமோ ?


Thravisham
அக் 18, 2025 07:09

கும்மிடிபூண்டிய தாண்டி நீ எங்காவது போனதுண்டா? வேறு ஏதாவது பாஷை பேச தெரியுமா?


vivek
அக் 18, 2025 10:36

ரியாதில் ஒட்டகம் மெய்க்கத்தான் லாயக்கு


jss
அக் 18, 2025 14:24

நீ்முதலில் பொன்னேரியை தாண்டியதுண்டா? கும்மிடபூண்டி பொன்னேரிக்கு அப்புறம்தீன் வரும் துராவுடர்களுக்கு தமழே ததிங்கிணத்தோம்.


Raghavan
அக் 17, 2025 22:25

எங்கள் தலைவருக்கு பான் மசாலாவும் பாப்கான் மட்டும் தான் பிடிக்கும். அவருக்கு இந்தியாவையே பிடிக்காது அப்படி இருக்கும் போது எப்படி மோடியை பிடிக்கும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை