உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஹத்ராஸ் பகுதிக்கு இன்று உத்தர பிரதேச முதல்வர் வருகை

ஹத்ராஸ் பகுதிக்கு இன்று உத்தர பிரதேச முதல்வர் வருகை

ஹத்ராஸ்: உத்தர பிரதேசத்தில் ஹத்ராஸ் பகுதியில் முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று பார்வையிடுகிறார் .உத்தர பிரதேசத்தில், ஹத்ராஸ் மாவட்டத்தின் சிகந்த்ரா ராவ் பகுதியில் உள்ள புல்ராய் என்ற கிராமத்தில் போலே பாபா என்பவரின் ஆன்மிக சொற்பொழிவு கூட்டம் நேற்று நடந்தது. போலே பாபா பேசி முடித்ததும், கூட்டத்தில் பங்கேற்றவர்கள் ஒருவரையொருவர் முண்டியடித்துக் கொண்டு வெளியேறினர். இதில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, பெண்கள், குழந்தைகள் உட்பட, 116 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.சம்பவம் நடந்த இடத்தினை அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று பார்வையிடுகிறார்.யார் இந்த போலே பாபாநாராயண் ஹரி, உ.பி.,யின் எட்டா மாவட்டத்தின் பகதுார் நகரி கிராமத்தில் பிறந்தார். கல்லுாரி படிப்புக்குப் பின், உ.பி., காவல் துறையின் உளவுப்பிரிவில் பணியாற்றிய அவர், ஆன்மிக ஈடுபாடு காரணமாக, 2006ல், விருப்ப ஓய்வு பெற்றார். உ.பி.,யின் பல்வேறு இடங்களுக்கு சென்று ஆன்மிகத்தை பரப்பிய அவர், தன் சொந்த கிராமத்தில் ஆசிரமத்தை கட்டினார். உ.பி.,யின் மேற்கு பகுதியில் மிகவும் பிரபலமான போலே பாபாவின் பேச்சைக் கேட்க, வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் வருகின்றனர். வெள்ளை நிற குர்தா, பேன்ட் அணியும் அவர், தன் மனைவியுடன் அமர்ந்து, சொற்பொழிவு ஆற்றி வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Apposthalan samlin
ஜூலை 03, 2024 10:22

அன்பே சிவம் வீட்டில் இருந்து அவரவர் சாமிய கும்பிட வேண்டும் எல்லா மதத்திலயும் புரோக்கர்கள் இருக்கிறார்கள் அவர்களை நம்பி போனால் இதான் நிலைமை. up எந்த வசதியும் கிடையாது o2 கிடையாது இறந்த உடல்களை தெருவில் கடத்தி வைத்து உள்ளார்கள் பார்க்கும் பொழுது மனது வலிக்கிறது. கிஸ்தி முழுவதும் up க்கு தான் போகுது என்ன செய்தார்கள் கண்ணக்கு வழக்கு கிடையாது .


ramesh
ஜூலை 03, 2024 10:18

துர் மரணம் நடந்து விட்டது .இதன் பிறகாவது இதை பார்த்த பிறகு மக்கள் தங்களை பாது காத்து கொள்ள முன் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும் .


ramesh
ஜூலை 03, 2024 10:13

இப்போது நடந்த மரணத்துக்கு யார் பொறுப்பு ஏற்பது .இப்போது யோகி ஆதித்யநாத் ராஜினாமா செய்யவேண்டும் என்று பிஜேபி இணர் சொல்லுவார்களா அல்லது ஸ்டாலின் ராஜினாமா செய்யவேண்டும் என்று சொன்ன அண்ணாமலை சொல்லுவாரா.


பாமரன்
ஜூலை 03, 2024 09:43

ஏதோ விருந்து சாப்பிட வருகை அப்பிடிங்கிற மாதிரி செய்தி போட்டிருக்கீங்களே ஸார்வாள்... கான்டராக்ட்படி நம்மவாக்கு மரருவாதி சாஸ்தி குடுக்கணும்தான் ஓகே... அதுக்காக இது இரிடேடிங்... எதிரிகட்சின்னா எப்படியெல்லாம் நக்கலடிப்போம்...?


RAMAKRISHNAN NATESAN
ஜூலை 03, 2024 09:36

சர்வாதிகார சரக்கு மாஸ்ட்டரு பாதிக்கப்பட்ட இடத்துக்கு இப்படி போவாரா ????


Mario
ஜூலை 03, 2024 09:05

இப்போ இவர் ராஜினாமா செய்வாரா


துஷார் சர்மா
ஜூலை 03, 2024 07:43

கைப்புள்ள கெளம்பியாச்சு. எத்தனை புல்டோசர் அனுப்பப்.போறாரோ தெரியலியே.


T.sthivinayagam
ஜூலை 03, 2024 07:40

அரசியல் லாபத்திற்காக ஹிந்துக்களை ஆன்மீக போதைக்கு ஆளாக்கி பலியிடுபவர்கள் தண்டிக்கபடுவார்களா் என மக்கள் கேட்கின்றனர்


prathab
ஜூலை 03, 2024 09:00

டாஸ்மார்க் இல்லை கள்ளச்சாராயம்...?


Kasimani Baskaran
ஜூலை 03, 2024 05:17

கூட்டம் வருகிறது என்றாலே காவல்துறை அதற்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும். ஏன் காவல்துறை இதை எளிதாக எடுத்துக்கொண்டது என்பதை தீரவிசாரிக்க வேண்டும். அதை விட ஏன் முண்டியடித்துக்கொண்டு வெளியேறினார்கள் என்பதையும் விசாரிக்க வேண்டும்.


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை