உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தனது தோல்வியை மறைக்கிறது உத்தரபிரதேச அரசு: அகிலேஷ் சாடல்

தனது தோல்வியை மறைக்கிறது உத்தரபிரதேச அரசு: அகிலேஷ் சாடல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லக்னோ: 'ஹத்ராஸ் சம்பவத்தில் தனது தோல்வியை மறைக்க, உ.பி அரசு நூற்றுக்கணக்கான மக்கள் மரணத்திற்கு பொறுப்பு ஏற்காமல் ஒரு சிலரை கைது செய்து தட்டிக்கழிக்க விரும்புகிறது' என சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார்.உத்தரபிரதேசம் ஹத்ராஸ் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக மாநில அரசால் நியமிக்கப்பட்ட 3 நபர் கொண்ட நீதி விசாரணை குழு நேரில் ஆய்வு செய்தனர். ஆன்மிக சொற்பொழிவுக்கு தலைமை ஒருங்கிணைப்பாளராக செயல்பட்ட தேவபிரகாஷ் மதுகரை போலீசார் கைது செய்தனர். இது குறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில் அகிலேஷ் யாதவ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஹத்ராஸ் சம்பவத்தில் தனது தோல்வியை மறைக்க, உ.பி அரசு நூற்றுக்கணக்கான மக்கள் மரணத்திற்கு பொறுப்பு ஏற்காமல் ஒரு சிலரை கைது செய்து தட்டிக்கழிக்க விரும்புகிறது. இது போன்ற ஒரு நிகழ்வு நடந்தும் யாரும் பாடம் கற்கவில்லை. எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்துகள் தொடரும். உத்தரபிரதேச பா.ஜ., அரசின் ஆட்டத்தை பொதுமக்கள் முன் கொண்டு வர வேண்டும். இது போன்ற நிகழ்வுக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என பா.ஜ., அரசு கூறினால் ஆட்சியில் இருக்க உரிமை இல்லை.இவ்வாறு அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Kasimani Baskaran
ஜூலை 07, 2024 04:34

ஒரு நபர் நீதிபதி குழு என்று காமடி செய்யாமல் மூன்று நீதிபதிகளை உடனே அனுப்பியிருப்பது உண்மைகளை வெளிக்கொணரத்தான் என்பது உறுதி. காவல்துறையின் இயலாமையை ஒரு அடிப்படை காரணம். இது போன்று அதிக கூட்டம் கூடும் இடங்களில் தொண்டூழியர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பங்கேற்று கூட்டத்தை கட்டுப்படுத்தி இருக்கவேண்டும். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பாதுகாப்புக்கு உத்திரவாதம் கொடுக்கவேண்டும்.


சந்திரசேகர்
ஜூலை 06, 2024 21:43

இவர் உத்திரபிரேதேசத்தை ஆண்ட கட்சி மற்றும் காங்கிரஸ் உபி ஆண்ட கட்சி ஆனால் இரண்டும் சேர்ந்து பிஜேபியை எதிர்ந்து பெரிசா ஒண்ணும் பண்ண முடியல. 27பெரிய கட்சி கூட்டணி வைத்தும் மத்தியில் ஆட்சி அமைக்க முடியவில்லை. ஆனாலும் ஏதோ சாதித்து விட்ட மாதிரி இந்த அல்லகைககள் மற்றும் காங்கிரஸ் அலப்பறை தாங்க முடிய வில்லை. ஐந்து வருடம் கழித்து முயற்சி செய்ய வேண்டும். அப்புறம் உபி மாநில தேர்தலில் காங்கிரஸ்வுடன் கூட்டணி வைத்தால் யார் முதலமைச்சர் என்பதை இப்போதே முடிவு செய்யுங்கள். இல்லாட்டி டில்லி மற்றும் பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சிக்கு நடந்த கதிதான் உங்களுக்கும்


அசோகன்
ஜூலை 06, 2024 20:51

கள்ளசாராயம் ஊத்திக்கொடுத்து மக்களை கொள்ளும் திமுக அரசின் சாதனையை யாராலும் செய்யமுடியாது


Priyan Vadanad
ஜூலை 06, 2024 19:09

மத்தியே மணிப்பூர் பற்றி எனக்கும் அதுக்கும் சம்பந்தமில்லை என்று இருக்கிறது. UP பற்றி சொல்லவா வேணும்///


P. VENKATESH RAJA
ஜூலை 06, 2024 18:02

உத்தரபிரதேசத்தில் 121 பலியான சம்பவம் குறித்து விசாரணை அவசியம் தேவை


GoK
ஜூலை 06, 2024 17:58

சமாஜ்வாதி கட்சி ஆட்சியில் இருந்த பொது நடக்காததா இப்போது நடக்கிறது?


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை