வாசகர்கள் கருத்துகள் ( 1 )
ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து கொள்கிறேன்
மேலும் செய்திகள்
ஸ்ரீமத் பாகவத புராண உபன்யாச நிகழ்ச்சி
6 hour(s) ago
தமிழ் சங்கத்தில் பாரதி விழா
6 hour(s) ago
தொழில்நுட்ப நுண்ணறிவு குறித்த சர்வதேச மாநாடு
6 hour(s) ago
டேராடூன்: உத்தராகண்ட் மாநிலத்தில் பஸ் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த விபத்தில், பயணிகள் 7 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.உத்தராகண்ட் மாநிலம் அல்மோரா மாவட்டத்தில் உள்ள பிகியாசைன் அருகே பல பயணிகளை ஏற்றிச் சென்ற பஸ் பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு மீட்பு படையினர் விரைந்தனர். நீண்ட நேரமாக மீட்புப் பணிகள் முழு வீச்சில் நடந்தன. இந்த விபத்தில் பயணிகள் 7 பேர் உயிரிழந்தனர். காயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: அல்மோரா மாவட்டத்தில் உள்ள பிக்கியசைனில் இருந்து ராம்நகருக்குச் சென்ற பஸ் விபத்துக்குள்ளானதில் பயணிகள் உயிரிழந்ததாக மிகவும் சோகமான செய்தி கிடைத்துள்ளது. இந்த சம்பவம் மிகவும் வேதனையானது. மனவேதனை அளிக்கிறது.இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து கொள்கிறேன். காயமடைந்த பயணிகளை மாவட்ட நிர்வாகம் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு இருக்கின்றனர். உள்ளூர் நிர்வாக அதிகாரிகளுடன் நான் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறேன். காயமடைந்த அனைவரும் விரைவாக குணமடைய கடவுளிடம் பிரார்த்திக்கிறேன். இவ்வாறு புஷ்கர் சிங் தாமி கூறியுள்ளார்.
ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து கொள்கிறேன்
6 hour(s) ago
6 hour(s) ago
6 hour(s) ago