உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வந்தே பாரத் ரயில்களை வாங்க ஆர்வம் காட்டும் வெளிநாடுகள்!

வந்தே பாரத் ரயில்களை வாங்க ஆர்வம் காட்டும் வெளிநாடுகள்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: வந்தே பாரத் ரயில்களை வாங்குவதில் கனடா, சிலி, மலேசியா ஆகிய நாடுகள் ஆர்வம் காட்டி வருகின்றன.மத்திய அரசு பெரு நகரங்களுக்கு இடையே வந்தே பாரத் ரயில்களை இயக்க ஆர்வம் காட்டி வருகிறது. நாட்டிலேயே அதிவேகமாக பயணிக்கும் ரயில் என்ற பெருமை இதற்கு உண்டு. மற்ற ரயில்களை காட்டிலும் இதற்கு கட்டணம் அதிகம் என்றாலும், செல்ல வேண்டிய இடங்களுக்கு விரைவாக செல்ல முடியும் என்பதால், இதற்கு பயணிகள் மத்தியில் வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்திய மக்களிடம் மட்டுமல்லாமல் சிலி, கனடா மற்றும் மலேஷியா ஆகிய நாடுகளும் இந்த ரயில் மீது ஆர்வம் காட்டி வருவதாக தெரியவந்துள்ளது.இது தொடர்பாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது: இதுபோன்ற ரயில்களை தயாரிக்க வெளிநாடுகளில் 160 முதல் 180 கோடி ரூபாய் வரை செலவாகும். ஆனால், இந்தியாவில் வந்தே பாரத் ரயில்கள் 120 முதல் 130 கோடி ரூபாய் தான் செலாவாகிறது. வேகதகத்தை அதிகரிப்பதிலும் வந்தே பாரத் ரயில்கள் முன்னணியில் உள்ளது. புல்லட் ரயில் கிளம்பிய 54 நொடிகளில் தான் மணிக்கு 100 கி.மீ., வேகத்தை எட்டும். ஆனால், வந்தே பாரத் ரயில்கள் 52 வினாடிகளில் இந்த தூரத்தை எட்டுகிறது.வடிவமைப்பிலும் வெளிநாட்டு ரயில்களை விட சிறப்பானதாகவும் உள்ளது. விமானங்களில் இருந்து வரும் சத்தத்தை விட வந்தே பாரத் ரயில்களில் இருந்து வரும் சத்தம் 100 மடங்கு குறைவு. எரிபொருள் நுகர்வும் குறைவு. இதற்காக இந்திய ரயில்வே கட்டமைப்பை அதிகரித்து வருவதுடன், ரயில்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் திட்டமிட்டு வருகிறது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

கண்ணன்
செப் 29, 2024 09:16

வயிற்றெரிச்சல் பேர்வழி அப்புசாமி எங்கே?


RA JA
செப் 28, 2024 21:08

மோடி ஆட்சி அமைந்த பிறகு வெளிநாடுகளில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்து கொண்டே செல்கிறது


Dharmavaan
செப் 28, 2024 19:51

அவை வந்தேறி ஜிகாதிகள்


Siva
செப் 28, 2024 19:37

Great workmanship of ICF, hats off to all the team members and to Indian Railways


Ravi Kumar Damodaran
செப் 28, 2024 18:39

மிகவும் பெருமையாகவும் சந்தோஷமாகவும் உள்ளது.


N.Purushothaman
செப் 28, 2024 18:35

வந்த பாரத் ரயில்கள் மீது கல்லெறியும் அளவிற்கு தான் நம் மக்களில் சிலரின் மூளை உள்ளது ....தமிழகத்திலும் இந்த கல்லெறி சம்பவம் நடந்தது ....


vbs manian
செப் 28, 2024 17:47

மோடிக்கு சபாஷ். இந்தியாவை எங்கோ கொண்டு போகிறார்.


narayanansagmailcom
செப் 28, 2024 17:06

இந்தியாவில் தொழில் புரட்ச்சி உண்டாகும். வேலை வாய்ப்பு அதிகரிக்கும்


Amsi Ramesh
செப் 28, 2024 15:56

வரும் நூற்றண்டு இந்தியாவினுடையது வந்தே மாதரம்


M Ramachandran
செப் 28, 2024 15:21

ராகுலுக்கும் கார்கேவிற்கும் வெத்துவேட்டு திராவிட கும்பலுக்கும் வயித்தெரிச்சல். 200 ஊபீஸுக்கு வயிறு கடாமுடாவாகி கவுண்டமணி செந்தில் ஜோடியின் நகைச்சுவைய்யக்கு ஈடாக ஆயிற்று


சமீபத்திய செய்தி