உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்... வந்தே பாரத்தை கூட்டிட்டு வந்தது கூட்ஸ் இன்ஜின்!

எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்... வந்தே பாரத்தை கூட்டிட்டு வந்தது கூட்ஸ் இன்ஜின்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

இட்டாவா: வந்தே பாரத் ரயில் திடீர் கோளாறால் நடுவழியில் நிற்க, சரக்கு ரயில் இன்ஜினை கொண்டு இழுத்துச் சென்ற வீடியோ வைரலாகி இருக்கிறது.புதுடில்லியில் இருந்து வாரணாசிக்கு வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. வழக்கம் போல் இந்த ரயில் டில்லியில் இருந்து ஏராளமான பயணிகளுடன் புறப்பட்டுச் சென்றது. உத்தரப்பிரதேச மாநிலம் இட்டாவா அருகே பரத்தானா என்ற பகுதிக்கு வந்தபோது திடீரென ரயிலில் கோளாறு ஏற்பட்டது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=mdnr7aev&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதையடுத்து, ரயிலை உடனடியாக நிறுத்திய டிரைவர்கள் இது குறித்து ரயில்வே உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். தொழில்நுட்ப கோளாறு காரணம் என்று தெரிய வர அதை சரிசெய்ய ஊழியர்கள் முயற்சி மேற்கொண்டனர்.3 மணி நேரம் போராடியும் கோளாறை சரி செய்ய முடியவில்லை. இதையடுத்து, அந்த ரயிலில் இருந்த பயணிகள் மாற்று ரயில்களில் அனுப்பி வைக்கப்பட்டனர். பின்னர் சரக்கு ரயில் இன்ஜினை பயன்படுத்தி வந்தே பாரத் ரயில் இழுத்துச் செல்லப்பட்டது. தண்டவாளத்தில் சரக்கு ரயில் என்ஜின் முன்பகுதியில் இயக்கப்பட அதன் பின்னால் வந்தே பாரத் ரயில் சென்றது. இதை அவ்வழியே செல்பவர்கள் கண்டு தங்களது செல்போன்களில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

தாமரை மலர்கிறது
செப் 09, 2024 23:48

அழகான பெண்ணை கூட்டிட்டு ஓடும் நாடக காதல் போன்றுள்ளது.


சமூக நல விரும்பி
செப் 09, 2024 23:04

மனிதனுக்கு உடல் நிலை சரி இல்லாமல் போவது போல மனிதனால் நிறுவப்பட்ட ரயில் பழுது சகஜமே.


அப்பாவி
செப் 09, 2024 21:06

வந்தே பாரத் நம்ம உள்ளூர் தொழில் நுட்பம் ஆச்சே. எங்கேயாவது கோட்டை வுட்டிருப்போம். ஆனா மெடல் மடும் ரவறாம கொடியசைச்சு குத்திப்போம்.


M Ramachandran
செப் 09, 2024 19:21

இந்த கருத்து ராகுலுக்கு இனிப்பான செய்தி. ஆனால் அமெரிக்காவில் எதைய்ய தின்னால் பித்தம் தெளியும் என்று அல்லாடிக்கொண்டிருக்கிறர்.


ديفيد رافائيل
செப் 09, 2024 19:00

Dinamalar உங்களுக்கு ரொம்ப ரொம்ப நக்கல் தான் ??????. Title இப்படி தான் போடுவீங்களா?


பெரிய குத்தூசி
செப் 09, 2024 18:25

வெறும் 185 கிலோமீட்டர் நீளம் ரயில்பாதையை கொண்ட சிங்கப்பூரில் 2019 ம் ஆண்டு முதல் சிங்கப்பூர் ரயில் போக்குவரத்து கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறால் கடந்த 4 வருடமாக தினசரி தடங்கல்கள் ஏற்படும். கட்டம் கட்டமாக சரி செய்யப்பட்டு இப்போது மாதம் ஓன்று முதல் இரண்டு முறை பழுது என குறைக்கப்பட்டுள்ளது. சுமார் 1 லட்சத்து 35000 கிலோமீட்டர் நீளம் கொண்ட இந்திய ரயில் கட்டமைப்பில் இது 0.00001 சதவிகிதம். தொழில்நுடபத்தில் கோளாறுகள் ஏற்படுவது இயல்பு. அதை எப்படி சமாளிப்பது என்ற மதிநுடபம் முக்கியமானது. அதை திறம்பட இந்திய ரயில்வே துறை திறம்பட செய்கிறது. பாராட்டுக்கள்.


Madhavan
செப் 09, 2024 17:55

வந்தே பாரத் விரைவு ரயில் புதிதாக விடப்பட்ட ஒன்று என்றாலும் அதுவும் அடிப்படையில் ஒரு இயந்திரம் தானே ... பழுது ஏற்பட்டு அதனால் பயணிகளுக்கு எந்தவிதமான ஆபத்தும் அசம்பாவிதமும் ஏற்படவில்லை என்பதை நினைத்து நிம்மதியடைவதை விட்டு விட்டு, ஒரு பத்திரிக்கையாளராக இது ஒரு நகைச்சுவையாக மட்டம் தட்டி சொல்ல வேண்டிய அவசியம் என்ன வந்தது? நல்ல ஆரோக்யமாக இருப்பதாக நினைத்துக் கொண்டிருப்பவர்களே வீல் சேரில் தங்களது முதுமையைக் கழிக்கிறார்கள் தனக்கு அழிவேயில்லை என நினைப்பவர்கள் மாதக் கணக்கில் மருத்துவ மனையில் உயிருக்குப் போராடுகிறார்கள்மரணமடைகிறார்கள். இறந்தால் கூட உயிரோடு இருப்பதைப் போல பிணத்திற்கு அலங்காரம் செய்து தெருத் தெருவாக ஊர்வலம் நடத்தி பின்னர் எரிக்கவோ புதைக்கவோதானே செய்கிறார்கள். இறைவன் படைப்பிற்கே இப்படியெனில் மனிதன் படைப்பில் இயந்திரம் பழுதாவதில் என்ன ஆச்சரியம்? இருப்புப் பாதைகள் ரயில்களைத் தாங்குகின்றன ஆனால் அவற்றை சுமந்து அடுக்கி வைக்க க்ரேன்கள் தேவையாக உள்ளனவே... இருப்புப் பாதைகளின் இடையே பரவப்படும் ஜல்லிக் கற்கள் லாரிகளில் பயணிக்கின்றனவேஇவைகளையும் நக்கல்பண்ணி ஒரு செய்தியாக வெளியிடுவீர்களோ? ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும் வண்டியும் ஒருநாள் ஓடத்தில் ஏறும்..இதுதான் உலக வழக்கு.


தமிழ்வேள்
செப் 09, 2024 17:15

எத்தனை வசதிகள் இருந்தாலும் இந்த யூனிட் வகை ரயில்கள் மித தூர பயணத்துக்கு மட்டுமே தகும் ..பாரதம் போன்ற ஜனத்தொகை அதிகம் கொண்ட நாடுகளில் கோச்சுகள் கொசுக்கள் உடைய தனித்த வால் இழுக்கப்படும் ரயிலே ஒத்துவரும் ...சாதாரணமாக 2000 பயணிகள் வரை பயணம் செய்ய இயலும் ..வெறும் 500 பயணிகளுக்கு நீன்ட தூர ரயில் என்பது மிகவும் அநியாயம் .....ஏசி ரயில்கள்தான் வேண்டும் என்றால் இருக்கை வசதி கொண்ட தேஜஸ் ரயில்களை போல குறைந்தது 20 கோச்சுகளோடு இயக்குவது நல்லது ....


Kumar Kumzi
செப் 09, 2024 17:51

எல்லா வாகனங்களுக்கும் எஞ்சின்களில் கோளாறு ஏற்படும் அதற்காக கற்கால மாட்டு வன்ட்டிக்கு போக சொல்கிறீரா


தமிழ்வேள்
செப் 09, 2024 20:11

குமிழி கற்காலத்துக்கு போகச் சொல்லவில்லை..வந்தே பாரத் பைத்தியம் பிடித்து அலையவேண்டாம் என்கிறேன்.. வந்தே பாரத் ரயிலுக்காக மற்ற எக்ஸ்பிரஸ் & பிரீமியம் டைப் வண்டிகளை நிறுத்துவது குறைப்பது எந்த விதத்திலும் நியாயம் இல்லை....வேக வித்தியாசம் பெரிதாக இல்லை என்னும்போது தேஜஸ் ஐசிஇ ரக வண்டிகள் அதிகம் இயக்கினால் வந்தே பாரத் கட்டணத்தில் அதிக பயணிகள் பயணிக்க முடியுமே? யூனிட் டைப் வண்டிகளை தொடர்ச்சியாக நீண்ட தூரம் இயக்குவதில் இம்மாதிரி பிரச்சினை வரும்.. சாதாரண வகை வண்டிகள் ஆக இருந்தால் என்ஜினை மட்டும் மாற்றி குறைந்த பட்சம் தாமதத்தோடு சர்வீஸ் தொடரும்...இது போல் சர்வீஸ் கேன்சல் ஆகும் வாய்ப்பு குறைவு..


பட்டினத்தார் , மலையும் மலை சார்ந்த பகுதி
செப் 10, 2024 11:20

The one who falls and gets up is stronger than the one who never tried. ... முயற்சியே செய்யாமல் இருப்பது தான் மிகப் பெரிய தவறு. தவறுகளில் இருந்து தான் நிறைய கற்றுக் கொள்ள முடியும். எப்பொழுதும் வெற்றி பெறுபவர்கள் சாதாரண சறுக்கல் கூட தாங்க முடியாமல் போகலாம். முயற்சி திருவினை ஆக்கும் என்பது வள்ளுவர் வாக்கு. வந்தே பாரத் இரயில்கள் முற்றிலும் இந்திய தயாரிப்பு. அதுவும் தமிழகத்தில் சென்னையில் வடிவமைத்து உருவாக்கப்பட்டது. கோயமுத்தூரில் மெட்ரோ ரயில்கள் தயாரிக்கப்படுகிறது. டிரைவர் இல்லா மெட்ரோ இரயில் தயாரிக்க கோவை கம்பெனிக்கு ஒப்பந்தம் கிடைத்துள்ளதாக செய்திகள் கூறுகிறது.


ManiK
செப் 09, 2024 17:14

Aeroplane, Ships also go through such defect cycle. Proper maintenance regime is to be enforced- then it will be OK


Srinivasan Krishnamoorthi
செப் 09, 2024 16:47

எல்லா நாட்டிலும் இது போல் குறைகள் ஏற்படுவதும் பின் சரி செய்யப்படுவதும் உண்டு


சமீபத்திய செய்தி