உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சாமி படத்தில் வில்லனாக அறிமுகமான நடிகர் கோட்டா சீனிவாச ராவ் காலமானார்!

சாமி படத்தில் வில்லனாக அறிமுகமான நடிகர் கோட்டா சீனிவாச ராவ் காலமானார்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஹைதராபாத்: தமிழில் 'சாமி' படத்தில் வில்லனாக அறிமுகமான நடிகர் கோட்டா சீனிவாச ராவ்,83, உடல்நல குறைவால் இன்று காலமானார்.ஆந்திராவை சேர்ந்த பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ளார். இவர் ஜூலை 10ம் தேதி, 1942ம் ஆண்டு ஆந்திரா மாநிலம், விஜயவாடாவில் பிறந்தார். இவருக்கு வயது 83. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=0wll0vjk&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இவர் குணசித்திர வேடத்திலும், வில்லன் வேடத்திலும் நடித்து பிரபலமானார். 2003ம் ஆண்டு வெளியான சாமி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். 1999 - 2004ம் ஆண்டு வரை ஆந்திர பிரதேச விஜயவாடா கிழக்குத் தொகுதியின் சட்டசபை உறுப்பினராக இருந்துள்ளார்.மேலும், திருப்பாச்சி, குத்து, ஏய், கோ, சகுனி போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவர் நடிகர், பாடகர், டப்பிங் கலைஞர் என பல்வேறு திறன்களை கொண்டுள்ளார். மொத்தம் 750 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இவரது நடிப்பில் கடைசியாக 2023ம் ஆண்டு சுவர்ண சுந்தரி என்ற படம் வெளியானது.கடந்த சில தினங்களாக, உடல்நலக் குறைவால் அவதிப்பட்ட நடிகர் கோட்டா ஸ்ரீனிவாச ராவ் (83) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இன்று (ஜூலை 13) அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் காலமானார். அவரது மறைவிற்கு பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Vijayakmar
ஜூலை 13, 2025 11:16

நல்ல பதிவு


theruvasagan
ஜூலை 13, 2025 11:10

ரங்காராவ் நம்பியார் அசோகன் இவர்களைப்போல வில்லன் ரோல் குணச்சித்திரம் இரண்டிலும் அசத்துவார். பாவத்தோடு கூடிய வசன உச்சரிப்பில் கைதேர்ந்தவர். பல ஆண்டுகளுக்கு முன்பு அவர் மகன் விபத்தில் இறந்து போனது அவருக்கு ஏற்பட்ட பெரும் சோகம். அன்னாரது ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.


satheesh kumar
ஜூலை 13, 2025 16:32

இவருது ஒரிஜினல் வாய்ஸ் இல்ல. டப்பிங். பட் நடிப்பு திறமை


Rajan
ஜூலை 13, 2025 09:58

நல்ல நடிகர். குரலில் மிரட்டுவார்


Bhaskaran
ஜூலை 13, 2025 09:53

வித்தியாசமான வில்லன் நடிகர்


Senthilkumar ks
ஜூலை 13, 2025 09:51

சரி உங்களை ஆஸ்பத்திரி அட்மிட் செய்ய வேண்டாம் என்று உங்க வீட்டுல சொல்லிடலாம்


Karthikeyan
ஜூலை 13, 2025 09:32

திறமையான நடிகர்... அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்...


Oviya Vijay
ஜூலை 13, 2025 09:08

இவர் குரலுக்கென்று தனி ரசிகர்கள் உண்டு... அந்தக் காலத்தில் மேஜர் சுந்தராஜன், வினு சக்கரவர்த்தி, வி கே ராமசாமி போன்ற வெகு சிலரின் குரல்கள் தனித்துவம் மிக்கதாக இருக்கும். அந்த வரிசையில் கோட்டா சீனிவாச ராவ் அவர்களின் குரலுக்கும் நிச்சயம் இடமுண்டு... அருமையான நடிகர்... நெடுங்காலம் அனைவராலும் நினைவில் கொள்ளப்படுவார்...


சின்ன சுடலை ஈர வெங்காயம் ராமசாமி
ஜூலை 13, 2025 10:54

அது டப்பிங் குரல். தமிழில் அவர் பேசியது இல்லை.


Padmasridharan
ஜூலை 13, 2025 07:30

ஒரு காலத்துல பிறப்பும் இறப்பும் வீட்டினில் நடந்தது சாமி. இப்ப எல்லாமே மருத்துவமனையில்தான் பணம் கொடுத்து, இருந்து, இறக்க வேண்டியிருக்கின்றது. பிறப்புக்கும் இறப்புக்கும் packages விலையை நிர்ணயிக்கிறார்கள். பணம் கொடுத்தால் ராஜமரியாதை கொடுக்கின்றனர் கோவில்களிலும் சுடுகாட்டிலும்