வாசகர்கள் கருத்துகள் ( 1 )
கொடி நாள் நிதிக்கு நிதி வழங்கியது நல்ல செய்தி.
புதுடில்லி: ராணுவத்தினருக்கான கொடி நாள் தினத்தை முன்னிட்டு, துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், தனது ஒரு மாத சம்பளத்தை கொடி நாள் நிதியாக வழங்கினார். மேலும் பொது மக்கள் தாமாக முன்வந்து நிதியளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.இந்தியாவை பாதுகாக்கும் நம் முப்படையினர், முன்னாள் வீரர்கள் நலனுக்கு நிதி திரட்டும் வகையில் டிச., 7 ல் கொடி நாள் கடைபிடிக்கப்படுகிறது. 1949 ம் ஆண்டு முதல் கொடி நாள் கடைபிடிக்கப்படுகிறது. நாட்டுக்காக வீர மரணம் அடைந்த வீரர்களின் குடும்பங்கள், காயமடைந்த வீரர்களுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது. மேலும், நாட்டின் பாதுகாப்புக்காக போராடும் முப்படை வீரர்களின் தியாகத்தையும், பங்களிப்பையும் போற்றும் நாளாகவும் இத்தினம் அமைந்துள்ளது. மக்களிடம் இருந்து பணம் பெற்று படை வீரர்கள் நலனுக்காக வழங்கப்பட்டு வருகிறது. இந்தக் கொடி நாள் நிதிக்கு அனைவரும் பங்களிப்போம் என பிரதமர் மோடி கூறியிருந்தார்.இந்நிலையில் துணை ஜனாதிபதி அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கொடி நாள் தினத்தை முன்னிட்டு, முன்னாள் ராணுவ வீரர்கள் நலத்துறை செயலாளர் சுக்ரிஜி லிக்கி தலைமையிலான மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் குழுவினர் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்தனர்.அப்போது, ராணுவத்தினருக்கான கொடி தினத்தை முன்னிட்டு தனது ஒரு மாத சம்பளத்தை கொடி நாள் நிதியாக துணை ஜனாதிபதி வழங்கினார்.ராணுவத்தினருக்கான கொடி தின நிதிக்கு அனைவரும் தாமாக முன்வந்து பங்களிப்பதன் மூலம் நமது தியாகிகள், ஊனமுற்ற வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு நன்றியை வெளிப்படுத்த வேண்டும் என அனைத்து குடிமக்களையும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கொடி நாள் நிதிக்கு நிதி வழங்கியது நல்ல செய்தி.