உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / துணை ஜனாதிபதி தேர்தல் நடக்கும் முறை: வெற்றிக்கு 392 ஓட்டுகள் தேவை

துணை ஜனாதிபதி தேர்தல் நடக்கும் முறை: வெற்றிக்கு 392 ஓட்டுகள் தேவை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: துணை ஜனாதிபதி தேர்தல் வரும் செப்டம்பர் 9ம்தேதி நடக்க உள்ள நிலையில், எப்படி நடக்கிறது? எப்படி தேர்வு செய்யப்படுகிறார் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன.துணை ஜனாதிபதியாக இருந்த ஜக்தீப் தன்கர் உடல்நலக்குறைவு காரணமாக ராஜினாமா செய்தார். இதனையடுத்து வரும் செப்டம்பர் 9 ம் தேதி புதிய துணை ஜனாதிபதியை தேர்வு செய்ய தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஆளும் தேஜ கூட்டணி சார்பில் மஹாராஷ்டிரா கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் எப்படி நடக்கும்?

ராஜ்யசபா, லோக்சபா எம்.பி.,க்கள் ஓட்டளித்து துணை ஜனாதிபதியை தேர்வு செய்வர். வழக்கமாக ஓட்டுகள் என்பதற்கு பதில், 'எலக்டோரல் கொலேஜ்' என்ற வார்த்தை பயன்படுத்தப்படும். ராஜ்யசபாவில் 6 காலியிடங்களை தவிர்த்து, 12 நியமன எம்.பி.,க்கள் உட்பட, 239 பேர் ஓட்டளிக்க தகுதியுடையவர்கள். இதே போல், லோக்சபாவில் ஒரு காலியிடம் தவிர்த்து, 542 பேர் ஓட்டளிக்க தகுதியுடையவர்கள். தற்போதைய நிலவரப்படி, மொத்தம் 782 பேர் ஓட்டுகள் உள்ளன. வெற்றிக்கு, 392 ஓட்டுகள் தேவை.

யாருக்கு வெற்றி?

மத்தியில் ஆளும் பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணிக்கு, லோக்சபாவில் 293; ராஜ்யசபாவில் 130 எம்.பி.,க்கள் உள்ளனர். எதிர்க்கட்சிகளின் 'இண்டி' கூட்டணிக்கு, லோக்சபாவில் 234; ராஜ்யசபாவில் 79 எம்.பி.,க்கள் உள்ளனர். இதன்படி, பா.ஜ., கூட்டணிக்கு 423 எம்.பி.,க்களின் ஆதரவு இருப்பதால், அக்கூட்டணியின் வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெறுவது உறுதியாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Natarajan Ramanathan
ஆக 18, 2025 22:29

திமுக மைத்ரேயனை துணை ஜனாதிபதி பதவிக்கு நிறுத்தப்போவதாக செய்தி வருகிறது.


சுந்தரம் விஸ்வநாதன்
ஆக 18, 2025 23:07

திமுகவில் அந்த சாதிக்காரருக்கு பஞ்சாயத்து வார்டு மெம்பர் பதவி கூட கொடுக்கமாட்டார்கள்.


S.V.Srinivasan
ஆக 20, 2025 07:54

அவருதான் அறிவாலயத்துல சரணடைஞ்சுட்டாரே .


ஆரூர் ரங்
ஆக 18, 2025 21:00

துணை ஜனாதிபதி தேர்தல் வாக்காளர் பட்டியலில் முறைகேடு. ராகு காலம் குற்றச்சாட்டு.


S.V.Srinivasan
ஆக 20, 2025 07:55

ஆரம்பிச்சாலும் ஆரம்பிச்சுடுவாரு. அவருக்கும் பொழுது போகனமுள்ள.


தாமரை மலர்கிறது
ஆக 18, 2025 20:22

தேர்தலில் வெற்றிபெறுவது என்பது பிஜேபிக்கு பிஸ்கட் சாப்பிட்ற மாதிரி தான்.


Ramesh Sargam
ஆக 18, 2025 20:40

எதிர்கட்சியினருக்கு விளக்கெண்ணெய் குடிப்பது மாதிரியா?


Ramesh Sargam
ஆக 18, 2025 19:57

ஒருவேளை எதிர்க்கட்சியினர் நிறுத்தும் வேற்பாளர் தோற்றுவிட்டால், ராகுல் மற்றும் அவர் கூட்டாளி கட்சியினர் இந்த துணை ஜனாதிபதி தேர்தலில் கூட திருட்டு வோட்டு போடப்பட்டது என்று புகார் செய்து ரகளையில் ஈடுபடுவார்கள்.


சமீபத்திய செய்தி