உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிரிட்டன் மன்னர் சார்லஸின் பரிசு; கடம்ப மரக்கன்றை பிரதமர் மோடி நடும் வீடியோ வைரல்

பிரிட்டன் மன்னர் சார்லஸின் பரிசு; கடம்ப மரக்கன்றை பிரதமர் மோடி நடும் வீடியோ வைரல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் மோடி, பிரிட்டன் மன்னர் சார்லஸ் பிறந்த நாள் பரிசாக அளித்த மரக்கன்றை நடும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகினது.பிரதமர் மோடி நேற்று முன்தினம் (செப்.,17) 75வது பிறந்த நாளை கொண்டாடினார். இதனை முன்னிட்டு, அவருக்கு பிரிட்டன் மன்னர் சார்லஸ் பிறந்த நாள் பரிசாக கடம்ப மரக்கன்று ஒன்றை அனுப்பி வைத்து இருந்தார். இன்று, அந்த மரக்கன்றை பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லமான, ' 7 லோக் கல்யாண் மார்க்கில்' மோடி நட்டு வைத்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=r3mmak05&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இது தொடர்பாக வெளியாகி உள்ள, 40 வினாடிகள் கொண்ட வீடியோவில், பிரதமர் மோடி மரக்கன்றை நட்டு, தண்ணீர் பாய்ச்சும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இது சமூக ஊடகங்களில் வைரலானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

naranam
செப் 20, 2025 06:04

நம் பாரத நாட்டில் இருநூறு ஆண்டுகளில் இருபதெட்டு மில்லியன் மக்களின் சாவுக்கும் படுகொலைக்கும் காரணம் இந்த பிரிட்டிஷார். உணவுப் பொருட்களை இங்கிலாந்து நாட்டுக்கு அனுப்பி விட்டு இங்குள்ளவர்கள் பட்டினியாக சாவதற்கு காரணம் இந்த பிரிட்டிஷார் தான். அவர்கள் இந்தியாவை ஆட்சி செய்வதற்கு முன் உலகப்பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்கு இருபத்தெட்டு விழுக்காடு இருந்தது. பிரிட்டிஷாரின் இருநூறு ஆண்டு ஆட்சிக்குப் பிறகு அதுவே ஒரு விழுக்காட்டிற்கும் குறைவாக ஆனது. அப்பேற்பட்ட கொடூரங்களை இந்தியாவில் புரிந்த பிரிட்டிஷாருக்கு என்றும் என் மரியாதை கிடையாது.


Gokul Krishnan
செப் 19, 2025 21:23

புர்ஜ் கலீஃபா கட்டிடத்தில் பல கோடி ரூபாய் முன்பதிவு செய்தால் மட்டுமே லேசர் விளக்கு வர்ணஜாலம் காண்பிக்கப்படும் ஆனால் இது பலபேர்களுக்கு தெரிந்தும் தெரியாதது போல் வாய் ஜாலம் செய்கிறார்கள்.


மனிதன்
செப் 19, 2025 20:55

போட்டோ, வீடியோவெல்லாம் எடுக்கும்போது, கூட இருக்குறவங்களையெல்லாம் தொரத்தி விட்டுடுவாரோ???


அசோகன்
செப் 19, 2025 17:22

கடவுள் அவதாரம் மோடிஜி


Vasan
செப் 19, 2025 15:32

எளிமைக்கு இலக்கணம் இவரல்லவோ. நீவீர் வாழ்கவே இன்னும் ஓர் நூறாண்டு.


சமீபத்திய செய்தி